டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

0
12

டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வென்றதன் மூலம், டி20 கிரிக்கெட் போட்டிகளில் 268 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது இந்திய அணி. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து 261 புள்ளிகளுடனும், 258 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா மூன்றாவது இடத்தை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலக கோப்பைக்கான போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்காவுடனான போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா உடன் மூன்று போட்டிகளில் இந்திய அணி விளையாடி 2-1 என்ற நிலையில் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து ஐசிசி டி20 போட்டிகளின் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

ஆஸ்திரேலியவுடன் போட்டியிட்ட இந்திய அணி முதல் போட்டியில் 208 ரன்கள் எடுத்த போதிலும் சரியான பந்துவீச்சு இல்லாத காரணத்தால் முதல் போட்டியில் தோல்வியுற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டி தொடங்கும் பட்சத்தில் மழை குறுக்கிட்டதால் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், 20 ஓவர்கள் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் இந்தியா இந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் அடுத்து மூன்றாவது போட்டி கடுமையாக இருக்கும் ஏனெனில் இரண்டு அணியும் சமமான நிலையில் இருந்தது.

ஆஸ்திரேலிய அணியினர் இந்திய அணிக்கு 187 ரன்களை இலக்காக வைத்தனர். இந்தியாவின் விராட் கோலியும் சூர்யக்குமார யாதவ்வும் சேர்ந்து அதிரடி காட்டியதால் இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது தொடரையும் கைப்பற்றியது. தற்போது ஐசிசி டி20 போட்டிகளில் புள்ளி பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியா 268 புள்ளிகளுடன் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here