T20 உலக கோப்பை 2022: இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது

0
12

T20 உலக கோப்பை 2022: இந்தாண்டுக்கான டி20 உலக கோப்பைக்கான போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. சூப்பர் 12 சுற்றுக்கு நுழைய கடும் போட்டிகள் நிலவி வருகின்றது. நேற்று இந்திய அணிக்கு எதிரான தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆஸ்திரேலியவில் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நேற்று இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றது. இதில் டாஸை வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் இந்திய கேப்டனான ரோஹூத் மற்றும் ராகுல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

T20 உலக கோப்பை 2022: இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது

பின்னர், நம்பிக்கை நட்சத்திரமான கோலியும் சொற்ப ரன்னில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் மட்டும் நின்று அதிரடியாக 40 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.தென்னாப்பிரக்க தரப்பில் பவுலிங்கில் கலக்கிய லுங்கி இங்கிடி 4 விக்கெட்டுகளை எடுத்தார். ப்ர்னேல் 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தரார்.

இதையும் படியுங்கள்: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திறக்கு தமிழக ஆளுநர் ஓப்புதல்

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியினரின் முதல் ஆட்ட வீரர்களை ஹர்ஷதீப் சிங் தன் பவுலிங்கில் விக்கெட் எடுத்து வெளியேற்றினார். ஆனால், மில்லரும் மார்க்கரும் நிதானமாக நிலைத்து நின்று அரைசதம் கண்டு தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு பாலமாய் இருந்தனர். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 19. 4 பந்துகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது தென்னாப்ரிக்கா.

இதன் மூலம் இந்தியாவின் அரை இறுதிக்கு வாய்ப்பு இருக்குமோ இருக்காதோ என்ற ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்திய அணிக்கு பல அரை இறுதிக்கு செல்ல வழிகள் உள்ளது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றதன் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது. இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் வென்றுள்ளது இவ்வணி. அதே போல இந்திய அணி நடைபெற்ற 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் 2 வது இடத்திற்கு சென்றுள்ளது.

இந்தியாவிற்கு எதிரான அடுத்த வங்கதேசம் மற்றும் ஜிம்பாபே அணியினருடன் நடைபெறும் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதே சமயம் தென்னாப்ரிக்கா பாகிஸ்தான் அல்லது நெதர்லாந்து அணிகளுடன் போட்டியில் தோல்வி அடையும் பட்சத்தில் இந்திய மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் ஓரே புள்ளி கணக்கில் இடம் பெறுவது உறுதி.

இது போல பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதி செல்லும் வாய்ப்பு மிகவும் அரிதான சூழலும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here