டி20 உலகக் கோப்பை: நேரடியாக திரையரங்குகளில் வெளியிட திட்டம்

0
10

டி20 உலகக் கோப்பை: 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக திரையரங்குகளில் வெளியிட ஐநாக்ஸ் திரையரங்கு நிறுவனம் ஐசிசியுடன் ஓப்பந்தம் செய்துள்ளது.

8வது டி20 உலகக் கோப்பை போட்டிகள் வருகின்ற 16ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இந்த போட்டிகளில் 16 அணிகள் போட்டியிடுகின்றது. இந்தியா சார்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இப்போட்டியில் பங்கு பெறுகின்றது.

இந்த போட்டியில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கலந்து கொள்ளும் இந்திய அணி 23ம் தேதி பாகிஸ்தானுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவுடனான 20 ஓவர் போட்டிகளை நேரடியாக ரசிகர்கள் பார்க்கும் வண்ணம் ஐநாக்ஸ் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் ஓளிபரப்ப ஐசிசியுடன் ஓப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

டி20 உலகக் கோப்பை: நேரடியாக திரையரங்குகளில் வெளியிட திட்டம்

உலகமெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் நேரடியாக விளையாட்டு மைதானத்திற்கு சென்று பார்ப்பது என்பது எளிதான காரியம் இல்லை. ஆதலால், முடிந்தவரை அந்த நேரடி ஓளிபரப்பை சிறிய திரையில் பார்ப்பதை விட பெரிய திரையில் பார்ப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் நிகழ்வாக இருக்கும்.

அதனால், ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகளில் ஓளிபரப்படும் 20 ஓவர் கிரிக்கெட் அவர்களின் கனவை நினைவாக்கும் வண்ணம் இருக்கும்  என்று நினைக்கிறேன். இந்தியா முழுவதும் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் ஐநாக்ஸ் திரையரங்குகளில் இந்த இந்தியாவுடனான போட்டிகளை மட்டும் ஓளிபரப்ப ஐநாக்ஸ் நிர்வாகம் ஐசிசியுடன் கூட்டு ஓப்பந்தம் செய்துள்ளது.

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்திய ரசிர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு இந்த நேரடி ஓளிபரப்பு ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகளில் பார்க்கும் அனுபவம் புதுமை நிறைந்ததாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இது போன்ற தகவல்களையும் ஆன்மீகம், ஜோதிடம், விளையாட்டு, சினிமா, உடல்நலம், செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here