T20 WORLD CUP: நெதர்லாந்து அணியுடனான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

0
22

T20 WORLD CUP: நெதர்லாந்து அணியுடனான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் ரோஹூத், கோலி, யாதவ் அதிரடியாக அடித்து அரைசதம் கடந்து நெதர்லாந்து அணிக்கு 179 ரன்களை இலக்காக அறிவித்தனர்.

இந்த ஆண்டுக்கான டி20 உலக கோப்பைக்கான போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இதில், இன்று நடந்த போட்டி ஆஸ்திரேலியவில் உள்ள சிடனியில் உள்ள ஸ்டேடியத்தில் இன்றைய போட்டியில் இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றது. இதில் டாசை வென்ற இந்தியா முதலில் களமிறங்கியது.

இதையும் கவனியுங்கள்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் வீராங்கனைக்கு ஓரே மாதிரியான சம்பளம்

இந்திய அணியின் ஓப்பரான கே.எல் ராகுல் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய கேப்டன் ரோஹூத் நிலைத்து ஆடி அரைசதம் விளாசினார். இவர் 4 ஃபோர்கள் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் விராட் கோலி நெதர்லாந்து பந்துகளை பதம் பார்த்து வந்தார். இவர் ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 62 ரன்கள் 3 ஃபோர், 2 சிக்சர்கள் எடுத்திருந்தார்.

T20 WORLD CUP: நெதர்லாந்து அணியுடனான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். 7 ஃபோர்கள், 1 சிக்ஸ் பறக்கவிட்டிருந்தார். 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி கோலி யாதவின் அதிரடியால் 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

நெதர்லாந்து அணியினர் 180 இலக்கை நோக்கி களமிறங்கினர். ஆரம்பம் முதலே நெதர்லாந்து வீரர்கள் அவுட்டாகி வெளியேறினர். அதிகபட்சமாக ஜெரராட் பிரிங்கில் 20 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் அனைவரும் 20 ரன்களுக்குள்ளேயே அவுட்டாகினர். இறுதியாக பால் வான் மீக்ரென் ஆட்டமிழக்காமல் 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணியினர் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய தரப்பிலிருந்து புவனேஷ்குமார் 2, அர்ஷதீப் 2, அஸ்வின் 2, பட்டேல் 2, ஷமி 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர். நெதர்லாந்து தரப்பில் பால் வான் மீக்ரென் 1, க்ளெசென் 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.

இந்திய அணி நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலாவது போட்டியான பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் தகவல்களையும் பல தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here