டி20 உலக கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது பாக்

0
7

டி20 உலக கோப்பை: இந்த ஆண்டு நடைபெற்று வரும் உலக கோப்பை தொடருக்கான போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. மிகவும் பரப்பரப்புக்கு மத்தியில் நடப்பு சாம்பியனான மேற்கிந்திய தீவுகள், இலங்கை, ஆஸ்திரேலியா என முன்னணி அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. சூப்பர் 12 சுற்றுகள் முடிந்து உள்ள இந்நிலையில், அரையிறுதி போட்டிக்கு குரூப் ஏ பிரிவில் நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றது. குரூப் பி பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லயம்சன் தலைமையிலான அணி டி20 உலக கோப்பையின் இறுதி போட்டிக்கு பாகிஸ்தானை வென்று இரண்டாவது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இருந்தது. அதைபோல, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அணியினர் மூன்றாவது முறை டி20 உலக கோப்பை இறுதி போட்டிக்கு செல்லும் முனைப்பில் இப்படி இரு அணிகளும் தகுந்த திறமையுடன் களம் காண காத்திருந்தது.

இந்நிலையில், முதல் அரையிறுதி போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே அரையிறுதி போட்டிகள் தொடங்கியது. முதலாவதாக டாஸை வென்ற நியூசி முதலில் போட்டிங் செய்ய உள்ளதாக தெரிவித்தது. அதன்படி முதலாவதாக களம் இறங்கிய நீயூசி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

டி20 உலக கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது பாக்

ப்லிப்சும் ஓற்றை இலக்க எண்ணில் வெளியேறினார். பின் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் மிட்செல் பார்ட்னர்ஷிப்பில் நிதானமாக ரன்களை சேர்த்தனர். 10 ஓவர்கள் முடிவில் 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிக் கொடுத்திருந்தது நியூசி அணி. வில்லியம்ஸன் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிக் கொடுத்தார். அடுத்ததாக களம் இறங்கிய நீஷம் நிதானமாக ரன்களை சேர்த்து இறுதியில் 16 ரன்களுடனும், அதிரடியாக விளையாடிய மிட்செல் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷகின் அப்ரிடி 2 விக்கெட்டும், நாவாஸ் 1 விக்கெட்டும் எடுத்திருந்தார்.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தொடர்ந்து துரத்திய பாகிஸ்தான் அணி வீர்ரகளான ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் நல்ல தொடக்கத்தை தொடர்ந்து முதல் 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி ரிஸ்வான் 41 ரன்களுடனும் பாபர் அசாம் 43 ரன்களும் எடுத்து நல்ல பார்ட்னர்ஷிப்பில் இணைந்து விளையாடி வந்தனர்.

ரிஸ்வான் 53 ரன்களிலும், பாபர் அசாம் 53 ரன்களிலும் டிரென்ட் போல்ட் வீசிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினர். தொடர்ந்து விளையாடி வந்த ஹாரிஸ் 30 ரன்கள் எடுத்திருந்த போது 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி சாதனை படைத்து டி20 உலக கோப்பை பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 4 வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here