T20 உலக கோப்பை: இலங்கைக்கு எதிரான தகுதிப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் விளையாடும் தமிழகத்தை சேர்ந்த கார்த்திக் மெய்யப்பன் ஹார்ட்டிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
டி20 உலக கோப்பைக்கான போட்டிகளில் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இலங்கை அணி இப்போட்டியில் யுஏஇ அணியை வென்றால் தான் தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது. இந்த போட்டியில் யுஏஇ அணியை இலங்கை அணி வென்று தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான யுஏஇ அணியுடனான போட்டியில் தமிழ்நாட்டில் சென்னையை சேர்ந்த கார்த்திக் மெய்யப்பன் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுத்து டி20 உலக கோப்பை தொடர்களில் 5வதாக இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இது, டி20 உலககோப்பையில் 5வது ஹாட்ரிக் சாதனையாகும். முதல் உலககோப்பையின் போது பிரட்லீ வங்கதேசத்துக்கு எதிராக நிகழ்த்தினார். அதன் பிறகு அயர்லாந்து வீரர் கேம்பர் என்ற வீரர் நெதர்லாந்துக்கு எதிராகவும், ஹசரங்கா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும், ரபாடா இங்கிலாந்துக்கு எதிராகவும் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தி இருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்: ஆசிய கோப்பை போட்டிக்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது
இந்த உலக கோப்பை தொடரில் இந்த சாதனை படைத்த முதல் தமிழக வீரர் என்ற சாதனையும் பெற்றுள்ளார். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்து 2012 ம் ஆண்டு குடும்பத்துடன் துபாய் சென்று அங்கு கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு இருந்தார். 2019ஆம் ஆண்டு அண்டர் 19 யுஏஇ அணியின் கேப்டனாக இருந்த மெய்யப்பன், அந்த ஆண்டிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் 15 ஓவரின் 4வது பந்தில் ஐபிஎல் வீரர் ராஜபக்சாவின் விக்கெட்டை மெய்யப்பன் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து அடுத்த பந்தில் அசலாங்காவை டக் அவுட்டாக்கிய மெய்யப்பன், கடைசி பந்தில் இலங்கை கேப்டன் ஷனாகாவை போல்ட் ஆக்கினார்.
இதன் மூலம் 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஹாட்ரிக் சாதனையை மெய்யப்பன் நிகழ்த்தி UAE அணிக்கும் பிறந்த சென்னை தமிழகத்திற்கும் பெருமையை பெற்று தந்துள்ளார்.