தனது பிறந்தநாளில் கற்றார் என்ற புதிய தளத்தை உருவாக்கிய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். உலகத்தரமான தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
திரையுலகில் எண்ணற்ற பாடங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அத்துடன் தமிழ் மீது தீரா காதல் கொண்டவராகவும் இருந்து வருகிறார். இன்றளவும் தமிழ் திரை உலகு மட்டும் இன்றி பாலிவுட் திரையுலகையும் தன் இசையால் வென்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று தனது 56 வது பிறந்தநாளில் கற்றார் (KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் ப்ளாட்பாமை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த ப்ளாட்பாமில் இசை மற்றும் கலைகளை கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளியிடலாம். இதன் வாயிலாக தங்கள் படைப்புகளை பட்டியலிடவும் பணமாக்கவும் இந்த புதிய ப்ளாட்பாம் உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

இசை மற்றும் கலைகளை பயணர்களுக்கு நேரடியாக வழங்குகிறது. இதன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் தனது பிரத்யோக படைப்புகளில் சிலவற்றை வெளியிடவுள்ளார். பல சர்வதேச தரத்திலான படைப்புகள் இந்த ப்ளாட்ப்ளாம் மூலம் வெளியாக உள்ளன.
தனது பிறந்தநாளை ஓட்டி பல புதிய திட்டங்களை அவரது கலைகளின் வழியே புதிய கலைஞர்கள் பயன் அடையும் வண்ணம் தமிழ் சமூகத்திற்கும் தமிழ் மக்கள் பயன் பெறும் வகையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. எண்ணற்ற புதிய கலைஞர்களை அடையாளம் காணும் புதிய தளமாகவும் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: ஜெயிலர் படத்தில் இணையும் மலையாள நடிகர் மோகன் லால்
நேற்று இசைப்புயலின் பிறந்தநாளை ஓட்டி பல முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் அனைவரும் பிறந்தநாள் தெரிவித்து வந்துள்ளனர்.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.