பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியான பூஜா ஹெக்டே சூரியா படத்தில் நடிக்கிறார்

0
7

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியான பூஜா ஹெக்டே சூரியாவிற்கு இணையாக நடிக்கிறார்.

தமிழ் திரையுலகில் முதன் முதலாக மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் 2010 ல் நடந்த மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் இரண்டாம் பிடத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இப்படம் பலவகையான கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விஜய் ரசிகர்கள் இப்படத்தை வெற்றி பெற செய்தனர். மேலும், வசூல் ரீதியில் தோல்வி ஆடையா வண்ணம் பார்த்து கொண்டனர்.

சிறுத்தை சிவா இயக்கும் சூரியாவின் படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளாதாகவும் தகவல் வந்துள்ளது. நடிகர் சூரியா உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து அனைவரின் மனதிலும் இடம் பெற்றார். கடைசியாக நடிகர் மாதவன் இயக்கி நடித்த படமான ராக்கெட்ரி நம்பி விளைவு படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியான பூஜா ஹெக்டே சூரியா படத்தில் நடிக்கிறார்

இதற்கிடையே அவர் தற்போது இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘சூர்யா 41’ என்றழைக்கப்படும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். கிருத்தி ஷெட்டியுடன் சூர்யா நடிக்கும் இதன் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. அதோடு இயக்குனர் சிவாவுடன் சூர்யா இணையும் ‘சூர்யா 39’ என்றழைக்கப்படும் படத்தின் பணிகளை அவர் விரைவில் தொடங்கவிருக்கிறார்.

சூர்யா 39 பெரிய பட்ஜெட் திரைப்படம் என்பதால், தயாரிப்பாளர் மாறியதால் படம் தாமதமானது. பிரபாஸின் ‘சாஹோ’ மற்றும் ‘ராதே ஷ்யாம்’ படங்களின் தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவதாக சில தினங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. அதோடு இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here