இன்று வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் 30.12.2022

0
8

இன்று திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை பற்றி இந்த பதிவில் அறியலாம்.

இந்தாண்டின் இறுதியில் பல முக்கிய திரைப்படங்கள் வெளியாகிறது. அந்த வகையில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் நடிகர் அஸ்வின் குமார் மற்றும் நடிகை கோவை சரளா நடிப்பில் உருவான செம்பி திரைப்படம் இன்று டிசம்பர் 30ல் வெளியாகிறது. இப்படத்தை பிரபு சாளமன் இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக இருக்கிறது. இந்த படத்தில் முற்றிலும் வேறு கதாபாத்திரத்தில் புதிய தோற்றத்தில் நடித்துள்ளார் கோவை சரளா.

அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டிரைவர் ஜமுனா முற்றிலும் பெண் டிரைவர்களை பற்றிய முழுமையான கதைத்தளம். இந்த படக்குழுவினர் 40க்கும் மேற்பட்ட பெண் டிரைவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆட்டோ ஓன்றை படக்குழுவின் சார்பில் நன்கொடையாக கொடுத்து அசத்தியுள்ளனர்.

இன்று வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் 30.12.2022

18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி தயாரித்து, இம்மாதம் முப்பதாம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகை வாகனத்தை இயக்கும் ஓட்டுநராக நடித்திருக்கிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடிகை சன்னிலியோன், ஜ.பி. முத்து, நகைச்சுவை நடிகர் சதீஷ், பாலா, தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் வரும் பேய் ஆண்களையே குறி வைக்கிறது. படத்தில் இரட்டை அர்த்தம் நிறைய உள்ளது. இந்த படத்தை சிந்தனை செய் என்ற படத்தை இயக்கிய யுவன் இயக்கியுள்ளார். இந்த படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அடுத்ததாக, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள ராங்கி திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அனைவரையும் கவர்ந்த த்ரிஷா ராங்கி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கதையில் சரவணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ராங்கி இப்படத்தில் முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் த்ரிஷா. சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் பலத்த காயம்

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here