ஓரே நாளில் வெளியாகும் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

0
11

ஓரே நாளில் வெளியாகும் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள். 10 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களின் முடிவுகள் நாளை மறுநாளான ஜூன் 17 ல் திட்டமிட்டப்படி வெளியிடப்படும் எனப்பட்டது. தற்போது அது ஜூன் 20 அன்று வெளியடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், பள்ளி மாணவர்களில் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்படாமல் மாணவர்களின் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஓரே நாளில் வெளியாகும் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

அதேபோல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டிலும் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 9.55 லட்சம் மாணவர்கள் 10 வகுப்பு தேர்வு எழுதினர். இவர்கள் மே மாதம் 30 தேதி இறுதி தேர்வு எழுதினர். இந்நிலையில் மாணவர்களின் அனைத்து தேர்வுத்தாள்களுக்கும் மதிப்பெண் திருத்தும் பணி நிறைவடைந்தது என அறிவிக்கப்பட்டது.

மாணவர்களிடையே மதிப்பெண் மற்றும் ரிசல்ட் எப்போது தெரிய வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது பள்ளிக்கல்வித்துறை ஜூன் 17 ல் 10 வகுப்பிற்கான ரிசல்ட் வெளியாகும் என தெரிவித்திருந்தது. 12 வகுப்பிற்கு ஜூன் 23 ல் ரிசல்ட வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தது.

தற்போது அதில் சிறு மாற்றத்தை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. அதன்படி 10 ம் வகுப்பு மாணவர்களின் ரிசல்ட்டும் 12 ம் வகுப்பு மாணவர்களின் ரிசல்ட்டும் ஒன்றாக அதாவது ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. 12 ம் வகுப்பிற்கு காலை 9.30 மணிக்கும், 10 ம் வகுப்பிற்கு பகல் 12.00 மணிக்கும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகளை ஆகிய தளங்களில் பார்க்கலாம் tnresults.nic.in, dge.tn.gov.in 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here