தமிழக வீராங்கனை பவானி தேவி குஜராத்தில் நடந்து வரும் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று வாள் வீச்சு போட்டியில் தங்கம் வென்று அசத்தல்.
குஜராத்தில் 36 வது தேசிய விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற வாள் வீச்சு போட்டியில் தமிழத்தை சார்ந்த பவானி தேவி தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் 2011, 2015 ஆகிய இரு ஆண்டும் நடந்த தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று இருமுறையும் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2022 இந்த ஆண்டின் தங்க பதக்கம் வென்றுள்ள நிலையில் இவருக்கு தொடர்ச்சியாக ஹாட்ரிக் முறையில் இவர் தங்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இந்த போட்டிக்கு முன் அவர் பேசுகையில், “தேசிய அளவிலான இந்த தொடர் எனக்கு மிக முக்கியமானது. நான் அதனை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன். கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் வாள்வீச்சு விளையாட்டு பெரிய அளவில் மாற்றத்தை கண்டுள்ளது என நினைக்கிறேன். இந்த முறை இந்த தொடர் வித்தியாசமானதாக இருக்கும். இதில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்.
இதையும் கவனியுங்கள்: காமன் வெல்த் வாள் வீச்சு போட்டியில் தங்கம் வென்றார் பவானி தேவி
2011 மற்றும் 2015 தொடரில் நான் பிற விளையாட்டுப் போட்டிகளையும் பார்த்தேன். சிறந்த விளையாட்டு வீரர்களுடன் பேசும் வாய்ப்பும் அமைந்தது. எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக இந்த போட்டி எனது ஆட்டத்தை மதிப்பீடு செய்ய உதவும் என கருதுகிறேன்.
தேசிய அளவிலான போட்டிகள் எனக்கு மிகவும் முக்கியமானவை. எனது ஆட்டமுறை (டெக்னிக்) மற்றும் மன ஆரோக்கியத்தை செம்மைப்படுத்தும் தொடர் இது தான். இதற்காக எனது பயிற்சியாளருடன் இணைந்து திட்டமிட்டுள்ளேன்” என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வாள் வீச்சு போட்டியில் தங்கபதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இது போன்ற பல தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.