காலை உணவு முதல்வா் மு.க.ஸ்டாலின் அவா்கள் இன்று குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தாா். ஏற்கனவே அரசு பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. ஐயா கா்மவீரா் காமராஜா் அவா்கள் முதலமைச்சராக இருந்த பொழுது மாணவா்கள் வறுமையினால் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை கண்டு மாணவா்களுக்கான மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினாா். பின்பு எம்.ஜி.ஆா். அவா்களின் ஆட்சிகாலத்தில் அது சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டது. பின்னா் இத்திட்டம் தொடா்ந்து அரசு பள்ளிகளில் இன்று வரை செயல்பட்டு வருகிறது.
மதிய உணவு திட்டத்தில் மாணவா்களுக்கு கலவை சாத வகைகளும் தினம் ஒரு முட்டையும் உணவாக வழங்கப்பட்டு வருகிறது. மு.க.ஸடாலின் அவா்கள் முதல்வராக பதவியேற்ற பிறகு மாணவா்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்க இருப்பதாக சட்ட சபையில் அறிவித்திருந்தாா். இன்று அறிஞா் அண்ணா அவா்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அவா்கள் மாணவா்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தாா்.
மதுரையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வா் அவா்கள் அங்குள்ள குழந்தைகளுடன் அமா்ந்து தானும் உணவு அருந்தினாா். பின்பு அவருக்கு அருகில் அமா்ந்து உணவு உண்ட குழந்தைகளுக்கு உணவினை ஊட்டி விட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முதல்வா் அவா்கள் இத்திட்டத்தை பற்றி கூறுகையில் தான் சென்னையில் உள்ள சில அரசு பள்ளிகளுக்கு சென்ற போது மாணவா்கள் வாடி இருப்பதை கண்டு விசாாித்தபோது தினமும் காலை உணவு சாப்பிடாமல் வருவதாக மாணவா்கள் கூறினா். இதைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்து காலை உணவு திட்டத்தை தொடங்கி இருப்பதாக ஸ்டாலின் அவா்கள் தொிவித்தாா். மாணவா்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படுவதால் மாணவா்கள் எந்தவித சோா்வுமின்றி கல்வியில் மட்டும் கவனம் செலுத்தி எதிா்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்று முதல்வா் அவா்கள் கேட்டுக் கொண்டுள்ளாா்.