தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குத் தடை அவசர சட்டம் இயற்றுகிறது.
நாளுக்கு நாள் ஆன்லைன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை நல்முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்பவர்கள் ஓருபுறம் இருக்க மற்றோர் புறம் ஆன்லைனை தவறாக பயன்படுத்துபவரும் இருக்க தான் செய்கின்றனர். அப்படி தவறாக ஆன்லைனை பயன்படுத்துபவர்கள் வீண் மன உளச்சலுக்கு இறையாகி குடும்பத்தை இழந்து உயிரை துறக்கின்றனர்.
அதிலும் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து பெற்ற பிள்ளைகளையும் மனைவியையும் இழந்து திக்கற்று, அனைத்தையும் இழந்து தற்கொலை செய்யும் அளவிற்கு வந்து விடுகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக ஓரு சிலர் கடன் வாங்கியும் நகைகளை அடகு வைத்தும் விட்டதை மீட்டு விடலாம் என்று எண்ணி தங்கள் சேமிப்பு மற்றும் தன்னிடம் இருக்கும் அனைத்து பொருட்களையும் விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியினால் பல தற்கொலைகள் நிகழ்கிறது. மேலும், தற்கொலையான நபரின் குடும்பமும் செய்வது அறியாது நிற்கும் நிலை ஏற்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் குற்றங்களையும் ரம்மி விளையாட்டை ஆட தூண்டும் விளம்பரங்களையும் கட்டுப்படுத்தவும் அதில் உள்ள பாதகங்களை தெரிவிக்கவும் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதியரசரான சந்துரு தலைமையில் அமைத்தது.
அதன் அடிப்படையில் ONLINE RUMMY தொடர்பான அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அதன் மீதான விவாதம் நேற்று மாலை முதலமைச்சர் தலைமையில் நடைப்பெற்றது. நீதிபதி சந்துரு தலைமையிலான அறிக்கையின்படி விரைவில் ஆன்லைன் ரம்மி விளையாடவும் அது தொடர்பான விளம்பரங்களை கட்டுப்படுத்தவும் சட்டம் இயற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின் மேல்முறையீடு மூலம் சரியான ஆதாரங்கள் இல்லாததால் அவ்விளையாட்டை தடை விதிக்க முடியாது என கூறி திரும்பவும் விளையாடவும் விளம்பரம் செய்யவும் தடை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.