ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ் நாட்டில் தடை செய்ய தமிழக ஆளுநர் ரவி ஓப்புதல் அளித்துள்ளார். ஆகையால், மீறி ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்கள், விளம்பரம் செய்பவர்கள், நடத்துபவர்களுக்கும் அபராதம் மற்றும் தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை.
ONLINE மூலம் ரம்மி விளையாட்டில் ஈடுப்பட்டு பல குடும்பங்கள் பணத்தை இழந்து தவிக்கின்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மக்கள். பணம் இழப்பது மட்டும் இன்றி குடும்பங்களை மறந்து தற்கொலை செய்து குடும்பத்தை அதோ கதியில் விட்டு உயிரை மாய்த்துக் கொல்லும் கொடுமையும் நெடுங்காலமாக நடைபெற்று வருகின்றது.
இந்த விளையாட்டுக்கு முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற அறிவுறுத்தலின் படியும் சில முக்கிய கட்டுபாடுகளுடனும் தொடர்ந்து சூதாட்டம் ஆட அனுமதி பெற்றது. இதனால் பலர் இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி பணத்தை இழந்து குடும்பத்தை நடித்தெருவில் விட்டு தன் உயிரை மாய்த்து கொண்டு வருவது தொடர் கதையாக இருந்து வருகின்றது.

இந்த விளையாட வரவழைக்க விளம்பரம் மூலம் முன்னணி நடிகர்களையும் நடிக்க வைக்கின்றனர். இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என மக்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். முதலில் இந்த விளையாட்டை தடை செய்யட்டும் என கருத்து மோதல்களும் ஏற்பட்டது.
இதன் ஓரு கட்டமாக தமிழக அரசு இதுபோன்ற விளையாட்டை அனுமதிக்க கூடாது என பலர் அறிவுறித்தி வந்தனர். இதனை அறிந்த அரசு இது குறித்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தையும் நடத்தியது. இதற்காக தனிக்குழுவும் நியமித்தது. அந்த குழு தெரிவித்த பல பக்கங்கள் அடங்கிய குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு நிரந்தரமாக இந்த விளையாட்டை தமிழ்நாட்டில் தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டு தமிழக ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஓப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்தின் படி பணமோ அல்லது பிற வெகுமதிகளோ கொடுக்கப்படும் ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. மீறினால் விளையாடுபவர்களையும் நடத்துபவர்களையும் விளம்பரம் செய்பவர்களையும் அபராதமும், தண்டனையும் வழங்கப்படும் என எச்சரித்துள்ளார்.