இந்தியாவில் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு அதற்கான அறிவிப்பு அணையை வெளியீட்டது தமிழக அரசு.
அழிந்து வரும் விலங்குகளில் தேவாங்கு இனமும் ஓன்று. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஓன்றியம் தேவாங்கு இனத்தினை அழிந்து வரும் இனமாக அறிவித்துள்ளது குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், அழிந்து வரும் தேவாங்கு இனத்தை அழிவிலிருந்து பாதுகாக்க இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் தேவாங்கு சரணாலயம் ஓன்றை ஏற்படுத்தி அதன் இனத்தினை பெருக்க வழிவகை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் இவைகளுக்கான அச்சுறுத்தல்களைத் தணித்தல் ஆகியவற்றின் மூலமே இவைகளின் எண்ணிக்கையைப் பெருக்க இயலும் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது தமிழக அரசு.

மனிதர்களில் பலரை தேவாங்கு என கேளி செய்வதுண்டு. ஆனால், சூற்றுச்சூழலுக்கு தேவாங்கு பலவிதங்களில் நன்மையை செய்கிறது. தேவாங்கு மிகச் சிறிய பாலுட்டி விலங்காகும் பார்ப்பதற்கு குரங்கு போல காணப்பட்டாலும் குரங்குகளிலிருந்து வேறுபட்டே காணப்படுகின்றது.
இந்த விலங்கானது, பெரும்பாலும் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மழைவளக் காடுகளில் மரங்களுக்கு இடையில் அதிகமான அளவில் வாழ்கின்றன. தேவாங்கு, அதிக பட்சமாக 41 செ.மீ. நீளமும், 300 கிராம் எடை மட்டுமே இருக்கும். இவை சிறிய பூச்சிகளையும், பறவைகளின் முட்டை களையும், சிறு பல்லி களையும் உணவாக உட்கொள்ளும். பசுமையான தாவரங்களில் இருக்கும் கொழுந்து இலைகளை அதிகமாக விரும்பி சாப்பிடும்.
மலைப்பாம்பு மற்றும் கழுகுகளின் வேட்டை பட்டியலில் தேவாங்கு முக்கிய இடத்தை பிடிக்கின்றது. தன்னுடைய பாதுகாப்பை கருதி, தேவாங்கு இரவில் மட்டுமே தன்னுடைய உணவுத் தேவையை பூர்த்தி செய்துகொள்ளும். பகலில் முழு நேரமும் உறங்குவதையே வேலையாகச் செய்யும்.
இவற்றில் சாம்பல்நிற தேவாங்கு, செந்நிற தேவாங்கு என்று இரண்டு வகைகள் உள்ளன. மர பொந்துகள், பாறை இடுக்குகள், புதர்களில் வாழும் தன்மை கொண்டவை, இந்த தேவாங்குகள். என்றாலும், இவை அடர்த்தியான மரங்கள் நிறைந்த காடுகளில், மேற்பகுதியில் இடைவெளி இல்லாத நிலையில் உள்ள மரங்களிலேயே அதிகம் வசிக்க விரும்புகின்றன.
169 நாட்களை கர்ப்ப நாட்களாக கொண்ட தேவாங்கு, அதிக பட்சமாக இரண்டு குட்டிகள் வரை போடும். அந்த குட்டிகளை 6 முதல் 7 மாதங்கள் வரை பாலூட்டி வளர்க்கும். அருகி வரும் இனமாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படும் இந்த விலங்கினம், அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. மருத்துவத்திற்கு இதன் ஒவ்வொரு பாகமும் பயன்படுவதாக மக்கள் நம்புவதன் காரணமாகவே இந்த வேட்டையாடல் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், 11,806 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதிகள், தேவாங்குகளின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இனத்தை உடனடியாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த தமிழக அரசு அதற்கான ஆணையை வெளியீட்டு உள்ளது.
அதன்படி அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972ன் கீழ் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக “கடவூர் தேவாங்கு சரணாலயம்” அமைத்து தமிழ்நாடு அரசு இன்று அறிக்கை செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.