அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனை சரிசெய்ய பல ஆண்டுகள் ஆகும் ஆனால், நாங்கள் ஓன்றரை ஆண்டுக்குள் சரி செய்வோம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 29ம் தேதி முதல் வடக்கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை நகரம் முழுவதும் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக பல இடங்களில் விடிய விடிய மழை பெய்ததன் காரணமாக பலரது வீடுகளை சூழ்ந்தும் தெருக்களை சூழ்ந்தும் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில கட்டுப்பாட்டு அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக சென்னை மட்டும் அல்லாது தமிழ்நாட்டையே சீரழி்த்து விட்டதாக தெரிகிறது. அதை எல்லாம் சரி செய்ய பல ஆண்டுகள் வரை ஆகும் நாங்கள் அதை ஓன்றரை ஆண்டுக்குள் சரி செய்து விடுவோம் என நம்பிக்கை உள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், வடசென்னை பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதாக தெரிகிறது. அது விரைவில் அப்புறப்படுத்தப்படும் என்றும் கூறினார். கடந்த ஆதிமுக ஆட்சியில் சென்னை நகரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காள் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். மழைநீர் வடிகாலுக்கு பல கோடி ரூபாய் ஏலம் விடப்பட்டு சீர்படுத்தப்படும் என அப்போதைய முதல்வர் எடப்பாடி கூறியிருந்தார். ஆனால், எந்த ஓரு மேம்பாடும் அடையவில்லை என்பதை மக்கள் அறிவர்.