Home செய்திகள் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கப்படவுள்ளது

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கப்படவுள்ளது

0
8

தமிழக விளையாட்டு வீரர்களான சதுரங்க விளையாட்டில் இளம் வீரரான பிக்ஞானந்தாவிற்கும் துப்பாக்கி சுடுதலில் சிறந்து விளங்கும் இளவேனில் வாலாறிவனுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட உள்ளது. மேலும், 25 வீரர் வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கி கௌரவப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஓவ்வொரு ஆண்டும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது, துரோணாச்சாரியார் விருது மற்றும் மேஜர் தியான்சந்த் விருது வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்திய விளையாட்டுத் துறையில் உயரிய விருதான மேஜர் தியான்சந்த் விருது தமிழகத்தை சார்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலுக்கு வழங்கப்பட உள்ளது. அது போல, தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவான் ஆகியோர் உட்பட 25 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. தடகளத்தில் சீமா புனியா, பேட்மிண்டனில் லக்‌ஷ்யா சென் மற்றும் பினாய் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கப்படவுள்ளது

துரோணாச்சாரியார் விருது 4 வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை முறைப்படி இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகின்ற நவம்பர் 30ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகின்றது.

இதையும் படியுங்கள்: இளம் கால்பந்து வீராங்கனையை இழந்தது தமிழகம் குடும்பத்தார் சோகம்

அர்ஜூனா விருது பெறும் வீரர்கள்: 

சீமா புனியா ( தடகளம்), எல்தோஸ் பால் (தடகளம்), அவினாஷ் முகுந்த் சேபிள் (தடகளம்), லக்ஷ்யா சென் (பேட்மிண்டன்), பிரணாய் (பேட்மிண்டன்), அமித் (குத்துச்சண்டை), நிகத் ஜரீன் (குத்துச்சண்டை), பக்தி பிரதீப் குல்கர்னி (செஸ்), ஆர் பிரக்ஞானந்தா (செஸ்), டீப் கிரேஸ் எக்கா (ஹாக்கி), சுஷிலா தேவி (ஜூடோ), சாக்ஷி குமாரி (கபடி), நயன் மோனி சைகியா, சாகர் கைலாஸ் ஓவல்கர் (மல்லகாம்ப்), இளவேனில், ஓம்பிரகாஷ் மிதர்வா, ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்), விகாஸ் தாக்கூர் (பளு தூக்குதல்), அன்ஷு (மல்யுத்தம்), சரிதா (மல்யுத்தம்), பர்வீன், மானசி கிரிஷ்சந்திரா ஜோஷி, தருண் தில்லான், ஸ்வப்னில் சஞ்சய் பாட்டீல், ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட உள்ளது.

துரோணாச்சாரியா விருது பெறும் வீரர்கள்: 

ஜிவன்ஜோத் சிங் தேஜா (வில்வித்தை), முகமது அலி கமர் (குத்துச்சண்டை), சுமா சித்தார்த் ஷிரூர் (பாரா ஷூட்டிங்), சுஜீத் மான் (மல்யுத்தம்) ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

தியான்சந்த் விருது பெறும் வீரர்கள்:

அஸ்வினி அக்குஜி (தடகளம் ) தரம்வீர் சிங் (ஹாக்கி) சுரேஷ் (கபடி) நீர் பகதூர் குராங்க்(பாரா தடகளம்)

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின் தொடருங்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here