சிலம்பாட்டப் போட்டியில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது

0
39

சிலம்பாட்டப் போட்டியில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்து ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்று அசத்தியுள்ளது. ஹரியானாவில் யூத் பெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்டம் போட்டியில் 15 தங்கம் உட்பட 27 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி முதலிடம் பெற்றது.

சென்னை, திருச்சி, மதுரை, கோவை உட்பட பல்வேறு மாவட்டதிலிருந்து கலந்து கொண்ட விளையாட்டு வீரா்கள் 169 பேர் கலந்து கொண்டனர் அவற்றில் 69 தங்கம், 39 வெள்ளி, 44 வெண்கலம் வென்று தமிழ்நாடு முதலிடம் பிடித்தது.

சிலம்பாட்டப் போட்டியில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது
சிலம்பாட்டப் போட்டியில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது

சிலம்பம் என்பது தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஓன்றாகும். இது தற்காப்பு கலைகளில் ஓன்றாகவும் பார்க்கப்படுகிறது. இவ்விளையாட்டை கம்பு சுற்றுதல், சிலம்பாட்டம், சிலம்பொலியாட்டம் என்றும் கூறுவர். கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மை பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளை கொண்டது.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஓன்றாக விளங்கும் சிலம்பத்தை தேசிய அளவில் நடத்த பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதன் பின் இவ்விளையாட்டை மத்திய அரசாங்கம் அங்கிகரித்தது. அதன் தொடர்ச்சியாக பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களையும் பெற்று வந்துள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், மேற்படி திட்டத்தின்கீழ் ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபடி மற்றும் உஷீ ஆகிய விளையாட்டுகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

அத்துடன், தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுக்கு முந்தைய இந்திய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டானது 3% விளையாட்டு இட ஒதுக்கீட்டின்கீழ் சேர்க்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்திருந்தார்.

மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தில் சிலம்பம் விளையாட்டு ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹரியானாவில் யூத் பெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்டம் போட்டியில் 15 தங்கம் உட்பட 27 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி பெற்று தமிழகத்திற்கு சிறப்பை தேடி தந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here