தமிழ்நாட்டின் 17 வது வனவிலங்கு சரணாலயம் கிருஷ்ணகிரியில்

0
28

தமிழ்நாட்டின் 17 வது வனவிலங்கு சரணாலயம் தருமபுரி மாவட்டம்  கிருஷ்ணகிரியில் அமைகிறது. அதற்கான அறவிப்பை தமிழ அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வடக்கு காவிரி வன விலங்கு சரணாலயம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவிரி வன உயிரின சரணாலத்தை இணைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நிறைந்த பகுதியாக அமைகிறது. தமிழகத்தில் 686.405 சதுர கி.மீ பரப்பிலான காப்புக்காடுகளை காவேரி தெற்கு வன உயிரின சரணாலயமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள 686.405 சதுர கி.மீ பரப்பிலான காப்புக்காடுகளை காவேரி தெற்கு வன உயிரின சரணாலயமாக வன உயிரின (பாதுகாப்புச் சட்டம் 1972, பிரிவு 26A-ன் கீழ் அறிவிக்கிறது.

இதையும் அறிக: இந்தியாவில் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டின் 17 வது வனவிலங்கு சரணாலயம் கிருஷ்ணகிரியில்

கடந்த ஓராண்டில், கழுவேலி பறவைகள் சரணாலயம் (விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள்), நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் (திருப்பூர் மாவட்டம்), கடவூர் தேவாங்கு சரணாலயம் (கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்) மற்றும் கடற்பசு பாதுகாப்பகம் (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) போன்றவற்றை வன உயிரின (பாதுகாப்புச் சட்டம், 1972 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சரணாலயம் 35 வகையான பாலூட்டிகள், 238 வகையான பறவைகள் மற்றும் 103-க்கும் மேற்பட்ட மரவகைகளை கொண்ட உயிர்பன்மை மிக்க பகுதியாக காணப்படுகிறது. காவேரி ஆற்றுப்படுகையான இங்கு டெக்கான் மஹனீர் மீன்கள், ஹம்ப்பேக்டு மஹனீர் மீன்கள், மெல்லிய ஓடுடைய ஆமைகள், மலை அணில்கள், நீர்நாய்கள், முதலைகள், நாற்கொம்பு மான்கள் போன்ற அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன.

இப்பகுதியில் 50 கி.மீ வரை அதாவது மேட்டூர் அணை வரை சிறந்த இயற்கை வளம் நிறைந்த காப்புக்காடுகளை கொண்டு விளங்குகிறது. இதனை சரணாலயமாக அறிவிப்பதன் மூலம் அரிய வகை உயிரினங்கள் பாதுகாக்கப்படும் வன உயிரினங்கள் மீட்டுருவாக்கம் மேலும், மண்வளம் மற்றும் நீர்வளம் பாதுகாக்கப்படும்.

இது போன்ற மேலும் பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை அணுகுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here