இளம் கால்பந்து வீராங்கனையை இழந்தது தமிழகம் குடும்பத்தார் சோகம்

0
7

இளம் கால்பந்து வீராங்கனையாக பயிற்சி பெற்று மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்று வந்தவர் பிரியா தற்போது மருத்துவர்களின் கவனக் குறைவால் அவரை இழந்தது தமிழகம்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பிரியா அவருக்கு வயது 17 அந்த மாணவிக்கு வலது கால் மூட்டு ஜவ்வு விலகியதால் கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அப்போது அவருக்கு சுருட்டு கட்டு போடப்பட்டது. இதனால், ரத்த ஓட்டம் தடைபட்டது. இதனால் மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மருத்துவர்களின் கவனக்குறைவால் அவரது வலது கால் அகற்றப்பட்டது. தன் மகளுக்கு கால் இல்லை என்றாலும் பரவாயில்லை உயிர் பிழைத்தால் போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்ட குடும்பத்தாருக்கு தன் மகள் இறந்து விட்டால் என்ற செய்தி பேரிடியாய் வந்துள்ளது.

இளம் கால்பந்து வீராங்கனையை இழந்தது தமிழகம் குடும்பத்தார் சோகம்

மருத்துவர்களை கடவுளாக பார்க்கப்படும் இக்காலக் கட்டத்தில் கூட இது போன்ற அலட்சியத்தால் உயிர்கள் மாய்வதை பொறுத்து கொள்ள முடியவில்லை. பல கனவுகளை கைப்பற்றி கொண்டு வாழ்க்கையில் போராடி வந்தவர் பிரயா. தன் தாய் தந்தை ரவிச்சந்திரன் மற்றும் உஷாராணியின் ஏழ்மை நிலையிலும் தான் ஓரு கால்பந்து வீராங்கனையாக உருவெடுக்க வேண்டும் என்ற கனவில் மண்ணை போட்டு புதைத்து உள்ளது மருத்துவம்.

இதையும் படியுங்கள்: தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மறைந்தார்

தவறான சிகிச்சை அளித்த எலும்பியல் துறையை சார்ந்த இரண்டு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அவரது சகோதரருக்கு அரசு பணி வழங்குவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் இந்த துயரச் சம்பவத்திற்கு நிவாரணமாக பிரியாவின் குடும்பத்தாருக்கு 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here