பழந்தமிழ் இலக்கியங்களை ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்றுக்கொடுக்க தமிழக அரசு திட்டம்

0
6

தமிழ் இலக்கியங்கள். இலக்கிய செழுமை மிக்க தமிழ் மொழியின் இலக்கிய நூல்களை ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது தமிழக அரசு. பழந்தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய நூல்களை கற்க விரும்புவர்களுக்கு வழிகாட்டியாக இந்த ஆன்லைன் வகுப்புகள் அமையும் எனவும், இந்த வகுப்புகள் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வாயிலாக நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் செழுமையான வரலாறு மற்றும் கலாச்சாரத்தை கற்பவரகளுக்கு புரிய வைப்பதும், தமிழ் மொழியில் உள்ள சிறந்த இலக்கியங்களை ஆய்வு செய்து விளக்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

tamilnadu government promoted classical tamil classes in online mode

இந்த ஆன்லைன் வகுப்புகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று மாதங்கள் மொழி அறிமுக வகுப்பும், ஆறு மாதங்கள் சிறப்பு நிலை வகுப்பும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து பல புதிய மாணவர்கள் இந்த ஆன்லைன் வகுப்பில் சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தை மேம்படுத்த மத்திய அரசு ஏற்கனவே ரூ.41.97 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பழந்தமிழ் மொழியின் சிறப்பை இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வளர்க்க இந்த ஆன்லைன் வகுப்புகள் பெரிதும் உதவும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here