தங்கலான் திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக இயக்குனர் ரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரமுடன் என்ற கூட்டணி இணைந்துள்ளது. இந்த வருடம் மூன்று வெற்றி படங்களை தந்திருக்கின்றார் சீயான் விக்ரம்.
நடிகர் விக்ரம் தன் உடலை வருத்தி பல படங்களில் நடித்து ரசிகர்களை பெற்றிருப்பவர். பல வெற்றி படங்களை தந்த போதிலும் பெரிய விருதுகள் அவருக்கு வழங்கப்படாதது ஓரு குறையாகவே உள்ளதாக வருத்தத்தை தெரிவிக்கும் அவரது ரசிகர்கள். இந்த வருடம் ஆரம்பத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நான் மகான் என்ற படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வெற்றி பெற்றார்.
அதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பல வேடங்களில் நடித்து ரசிகர்களை அசத்திய விக்ரமின் கோப்ரா படத்தை கொண்டாடினர். இந்த நிலையில் மணிரத்னத்தின் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து அனைவரின் ஆதரவையும் பெற்றார். இந்த வருடம் மூன்று படங்களில் நடித்துள்ள சீயான் விக்ரம்.

தற்போது, இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைந்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க 3டி தொழில் நுட்பத்தில் உருவாகி வருவதாக கூறியிருந்தனர் படக்குழுவினர். இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் மற்றும் ரஞ்சித்தின் நீலம் புரோடோக்ஷன்சும் இணைந்து வழங்கிறது. இந்த படத்தில் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பான தோற்றத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.
இந்நிலையில், படுபிசியாக தங்கலான் படப்பிடிப்பு ஓக்கேனிக்கலில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. பேக்கப் என்றதும் படக்குழுவினருடன் தண்ணீரில் குதித்து விளையாடியதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார் விக்ரம்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று ஒகேனக்கல் அருகில் தங்கலான் படப்பிடிப்பு கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது பேக்கப் என்று கேட்டதும் ஒரே குதி! தண்ணீரில் என் நண்பர்களை விடுவேனா என்ன? ஐயோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியில் தண்ணீரை விட்டு வர மறுத்தது தான் மிச்சம்” எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்: மறைந்த வைரவனின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்-விஷ்ணு விஷால்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.