பொதுவாக மீன்களை வறுத்து சாப்பிடுவதை விட குழம்பில் போட்டு சாப்பிட்டால் தான் சத்து அதிகம். குழந்தைகளுக்கும் குழம்பு மீன் தான் சிறந்ததாக இருக்கும். எந்த வகையான மீனாக இருந்தாலும் இந்த மாதிரி குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மீன் – 1/2 கிலோ
சி.வெங்காயம் – 1/4 கிலோ
தக்காளி – 4
பூண்டு-15 பல்
கடுகு – சிறிதளவு
உ.பருப்பு – சிறிதளவு
வெந்தயம் – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
க.வேப்பிலை – சிறிதளவு
புளி – 1 எலுமிச்சை அளவு
உப்பு – தே. அளவு
ம.தூள் – 1/4 டீஸ்பூன்
மி.தூள் – 11/2 டீஸ்பூன்
மீன் கு.மி.தூள்- 3 டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
ந.எண்ணெய் – 100 மிலி
ஆயில் – 50 மிலி
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் முக்கால் பாகம் சி.வெங்காயம், 10 பல் பூண்டு, தக்காளி, சீரகம், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி கொள்ளவும். இவை ஆறியதும் அரைத்துக் கொள்ளவும். இவை பாதி மைந்தவுடன் அதில் மல்லி தூள், மி.தூள், ம.தூள், மீன் குழம்பு மி.தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு புளியை நன்றாக கரைத்து அந்த கரைசலில் அரைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் காெள்ளவும். உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்பு கடாயில் மீதமிருக்கும் எண்ணெய் மற்றும் ந.எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொறிந்ததும் மீதமுள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் கலந்து வைத்துள்ள புளி, மசாலா கரைசலை அதில் சேர்க்கவும். உப்பு, காரம் சரிபார்த்த பின்னர் குழம்பை நன்கு கொதிக்க விடவும். பச்சை வாசனை போய் குழம்பு சற்று சுண்டும் வரை நன்கு கொதிக்க விடவும். பின்னர் கழுவி வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு 10 நிமிடம் மட்டும் விட்டு அடுப்பை அணைத்து விடவும். சிறிது நேரம் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மீன் குழம்பு ரெடி.