TATA NEU செயலியானது பெரும் வரவேற்ப்புக்கு மத்தியில் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் அறிமுகப்படுத்தினார். இந்தியன் பீரிமியர் லீக் எனப்படும் IPL T20 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. டெல்லி கேப்பிட்டல் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதுவதற்கு தயாராக இருந்த தருவாயில் இந்த செயலியை அறிமுகம் செய்யப்பட்டது.
TATA NEU வானது நுகர்வோருக்கு வசதியாக அனைத்து சேவைகளையும் இந்த ஆப்-பில் இணைக்கின்றது. தற்போது அமேசான், பிளிப்கார்ட், ஜீ-பே, பேட்டிஎம், ஜுயோ போன்ற பல செயலிகள் பல நுகர்வொருக்கு தன் சேவைகளை செய்து கொண்டுள்ளது.
அது போல டாடா நீயுவும் செயல்படும். இந்த ஒரு செயலியில் AirAsia India, BigBasket,Starbucks, Tata 1Mg, Croma, Tata CLiQ, IHCL, Westside மற்றும் பல பிராண்டுகளை ஆராய முடியும்.
அனைத்து நுகர்வோர் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக இருக்கும்.
டாடா நீயு செயலியில் UPI பில் செலுத்துதல், காப்பீடு பெறுதல், காப்பீட்டிற்கு பணம் செலுத்துதல், ஹேட்டல்கள் புக்கிங் செய்வது, விமான முன்பதிவு, தியேட்டர்ளில் டிக்கெட் எடுப்பது, நிதிச் சலுகை விவர்ங்களையும் வழங்குகிறது என்று TATA DIGITAL ஓன்றில் தெரிவித்துள்ளது.
டாடா Neu-யில் Vistara, Air India, Titan, Tanishq, Tata Motors ஆகியவை விரைவில் இணைய உள்ளன.
பிரதிக் பால் (CEO of Tata Digital) கருத்துப்படி, எந்த ஆப்-பின் பயணம் 120 மில்லியன் பயனர்கள், 2,500 ஆஃப்லைன் கடைகள், குழுவின் டிஜிட்டல் சொத்துக்கள் முழுவதும் 80 மில்லியன் பயன்பாட்டு தடம் ஆகியவற்றுடன் தொடங்கியுள்ளது.
மேலும், Tata Neu ஒரு “சக்திவாய்ந்த இன்னும் எளிமைப்படுத்தப்பட்ட” வெகுமதி திட்டத்துடன் வருகிறது – NeuPass. உறுப்பினர்கள் ஒவ்வொரு முறையும் ஷாப்பிங் செய்யும் போது, உணவருந்தும்போதோ அல்லது டாடா நீயு வழியாகப் பயணம் செய்யும்போதோ 5 சதவிகித NeuCoins அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கிறார்கள்.
”அதிக பிராண்டுகள் மற்றும் பிரிவுகள் உள்வாங்கப்படுவதால், பயன்பாடு தொடர்ந்து வளரும். டாடா நீயு பயன்பாடு Android, iOS இயங்குதளங்கள் மற்றும் TataDigital.com இல் கிடைக்கிறது” என்று நிறுவனம் கூறியது.