பாகுபலி நடிகர் பிரபாஸ் பட டீசர் அயோத்தியில் வெளியாகிறது

0
6

பிரபாஸ்:prabhas adhipurush teaser பாகுபலி திரைப்படம் மூலம் உலக அளவில் பிரபலமடைந்தவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். ராஜ மெளலி இயக்கி பிரபாஸ் நடித்த பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டுமே உலக அளவில் திரையிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. பாகுபலியில் பிரபாஸின் நடிப்பை கண்டு திரையுலகினரும் இரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர். பாகுபலி ஒரு சரித்திர படமாக பிரபாஸ்க்கு அமைந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சரித்திர படத்தில் பிரபாஸ் களமிறங்கியுள்ளார்.

தனாஜி என்ற இந்தி படத்தை இயக்கியவர் ஓம்ராவத். அந்த படத்தில் அஜய் தேவ்கன், சைப் அலிகான், கஜோல் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ஓம்ராவத் தனது அடுத்த படமான ஆதிபுருஷ் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், கீர்த்தி சனோன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். மேலும் சைப் அலிகான், வத்சல் செத், சன்னி சிங் உட்பட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

 

இந்தப்படம் ராமாயணம் புராணத்தின் தழுவலாக அமைந்துள்ளது. இதில் ராமராக பிரபாஸ்ம், சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக சைப் அலிகானும் நடிக்கிறார்கள். இப்படம் ராமாயாணக் கதை என்பதால் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பாளர் பூஷன் குமார் விரும்புகிறார். இதையடுத்து வரும் அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தியன்று இந்த படத்தின் பிரம்மாண்ட விழா அயோத்தியில் நடைபெற உள்ளது. இதில் பிரபாஸ் உள்பட படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12 ம் தேதி திரைக்கு வர உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here