மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவான அர்த்தம் படத்தின் டீசர் வெளியீடு

0
6

மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் அர்த்தம் இப்படத்தின் டீசர் வெளியானது. இதன் தொடர்ந்து அவர் பேசுகையில் நல்ல கன்டன்ட் உள்ள படங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

90 ஆன் ஆண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக கொண்டாடப்பட்டவர் மகேந்திரன் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். குறும்புகார குழந்தையாகவும் பல டைலக்குகளை சிறப்பாகவும் பேசியும் நடித்திருப்பார். இவர் நடித்த படங்களில் இவரின் ரோல் மிக முக்கியமானதாக இருக்கும்.

நகைச்சுவை கலந்த படத்திலும் பலே ஜோராக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் என்றால் மிகையாகாது. பெரியவனாக வளர்ந்த பிறகு படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் சூப்பர் ஹீ்ட ஆனது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் சிறு வயது தோற்றத்தில் மகேந்திரன் தனது நடிப்பை சிறப்பாக நடித்திருப்பார்.

மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவான படத்தின் டீசர் வெளியீடு

இந்நிலையில், மாஸ்டர் படத்திற்கு பிறகு நல்ல இடம் நமக்கு இருப்பதாக நினைத்த மகேந்திரன் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் பதிப்பிற்கான வசனத்தை கீர்த்தி வாசன் எழுத, பாடல்களை முத்தமிழ் எழுதி இருக்கிறார்.

மாஸ்டர் மகேந்திரன் முழுமையான அர்ப்பணிப்புடன் இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வெளியான பிறகு அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here