பாலகிருஷ்ணா: எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஆந்திராவை சேர்ந்த மாணவிக்கு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா 10 லட்சம் நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளார். இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது அறுவை சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். பொருளாதார ரீதியாக பின் தங்கியிருக்கும் அந்த குடும்பம் குறிப்பிட்ட தொகையை ஏற்பாடு செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அந்த மாணவிக்கு உதவ முன்வந்துள்ளார். மாணவியின் மருத்துவ செலவுக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி அளிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் மாணவியின் மேல் சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் தானே ஏற்பதாக உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலகிருஷ்ணாவின் இந்த செயலால் அவரது ரசிகர்கள் நெகிழ்ந்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.