ராம்சரண்: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றினார் நடிகர் ராம்சரண். சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட் 9 வயது சிறுவன் மணி குஷால், ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். மணி குஷால் ராம் சரணை நேரில் பார்க்க ஆசைப்பட்டுள்ளான். இதுபற்றி இணையதளத்தில் வந்த செய்தியை படித்த ராம்சரண் மருத்துவமனைக்கு நேரில் சென்று மணி குஷாலை சந்தித்துள்ளார்.
அப்போது அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ராம் சரண் நீண்ட நேரம் மணி குஷாலுடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த சிறுவனுக்கு ராம்சரண் பரிசுகள் வழங்கியதோடு தன் கைப்பட லெட்டர் எழுதியதும், ஆட்டோகிராப் போட்டும் அந்த சிறுவனிடம் தந்தார். பின்னர் அவரது பெற்றோருக்கு ராம் சரண் ஆறுதல் கூறினார். ராம்சரணின் இந்த செயலால் அவர்களது பெற்றோர்கள் மனம் நெகிழ்ந்தனர். ராம்சரணின் இந்த செயலை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.