தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரின் தாயார் மரணம்

0
36

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் தாயார் இந்திராதேவி 70 மரணம். திரையுலகங்களும் ரசிகர்களும் ஆறுதல்.

டோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும் சவுத் இந்தியன் பிரின்ஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் மகேஷ் பாபு. தெலுங்கில் அதிக அளவு ரசிகர் படை வைத்திருக்கும் நடிகர்களில் முன்னணியில் உள்ளார் நடிகர் மகேஷ் பாபு. இவரது தாயாரான இந்திராதேவி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் மகேஷ் பாபுவின் சகோதரர் ரமேஷ் பாபு உடல் நல குறைவால் இறந்தார். அவர் இறந்து முழுவதுமாக ஓரு வருடம் கூட முடியாத நிலையில் அவரது தாயாரும் இறந்துள்ளது அவரையும் அவரது குடும்பத்தையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அம்மா உயிரிழந்த செய்தி அறிந்து துடித்தெழுந்த டோலிவுட் பிரபலங்கள் பலரும் இந்திரா தேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்று வருகின்றனர். மேலும், பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 9 மணி முதல் 12 மணி வரை இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரின் தாயார் மரணம்

இந்நிலையில், திரைப் பிரபலங்கள் ஏராளமானோர் ஓன்று கூடி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி மகேஷ் பாபுவிற்கு ஆறுதல் கூறிவருகின்றனர். இந்த தருணத்தில் அவரது ரசிகர்கள் #MaheshBabu எனும் ஹாஷ்டேக்கை இந்தியளவில் மகேஷ்பாபு ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். மகேஷ் பாபு அவரது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு நடிகர் மகேஷ் பாபுவுக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும் என்றும் கவலைப்படாதீங்க அண்ணா என்றும் ட்வீட் போட்டு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here