தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மறைந்தார்

0
23

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்து வந்தவர் நடிகர் கிருஷ்ணா (79) அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு நேற்று அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இவ்உலகை விட்டு மறைந்தார்.

திரையுலகில் 350க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் கிருஷ்ணா தொடக்க காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். 1965க்கு பிறகு திரைத்துறையில் சிறந்த நடிப்பாற்றலாள் தெலுங்கர்களின் உள்ளம் கவர்ந்தவராக இருந்தவர். அரசியல் கட்சி ஆர்ம்பித்து எம்.பியாகவும் இருந்தவர். தன் அரசியல் வாழ்வுக்கு ஓய்வு அளிப்பதாகவும் கூறி விலகியிருந்தவர்.

இவரது வாரிசுகள் 5 பேர் அதில் ஓருவரே மகேஷ்பாபு இவர் தற்போது வரை தெலுங்கு படங்களில் முன்னணி நடிகராக இருந்து வருபவர். இந்தாண்டு இவரது குடும்பத்தில் ஏற்ப்பட்ட மூன்றாவது துயரச் சம்பவமாக பார்க்கப்படுகின்றது. இந்தாண்டு தொடக்கத்தில் ஜனவரியில் தனது அண்ணன் ரமேஷ் பாபுவை இழந்தார். அவருக்கு ஏற்பட்ட தீடீர் இதய‍டைப்பு காரணமாக இறந்தார். அவருக்கு வயது 56 இந்த சம்பவத்தை தொடர்ந்து தனது தயாரான இந்திராதேவியை செப்டம்பர் மாதம் இழந்தார். தற்போது அவரது தந்தையான நடிப்பு துறையில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய கிருஷ்ணாவை இழந்துள்ளார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மறைந்தார்

நடிகர் கிருஷ்ணா நடிப்பு துறையில் மட்டும் அல்லாது தயாரிப்பு பணிகளையும் இயக்க பணிகளையும் செய்து வந்தவர். இப்படி பன்முகத் தன்மையுடன் இருந்தவர் கிருஷ்ணா. நேற்று உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை தந்து வந்தனர். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக அவருக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவரை விட்டு உயிர் இன்று காலை பிரிந்தது.

ஓரே ஆண்டில் தொடர்ந்து அண்ணன், தாய், தந்தை என மூவரையும் இழந்து வாடும் மகேஷ் பாபு குடும்பத்தாருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இது போன்ற பல வகையான தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here