சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மாவீரன்’ படத்தில் ‘புஷ்பா’ பட வில்லன் இணைந்துள்ளார்

0
12

மாவீரன்: சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளியன்று வெளியான ‘பிரின்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே சரியான வரவேற்பை பெறவில்லை. கதையில் புதுமை ஏதும் இல்லாததால் படம் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யோகி பாபு நடிப்பில் உருவான ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் சிவகார்த்திகேயனின் ஹேர்ஸ்டைல் 90களில் இருக்கும் ரஜினிகாந்தை போன்றே இருந்தது. மேலும் இப்படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகம் இருப்பத்ற்கான வாய்ப்புகளும் போஸ்டர் மூலம் தெரிந்தது.

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக பழம்பெரும் நடிகை சரிதா நடித்துள்ளார். இப்படத்தில் வில்லனாக இயக்குனர் மிஸ்கின் மற்றும் காமெடியனாக யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார்.

telungu actor sunil committed in maaveeran

இந்நிலையில் மாவீரன் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைய உள்ளார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் சுனில் தெலுங்கு திரையுலகில் காமெடியனாக கலக்கியவர். பின்னர் அவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால் அது சரியாக ஒர்க்அவுட் ஆகாததால் தற்போது குணச்சித்திர வேடங்களில் பட்டையை கிளப்பி வருகிறார். சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் அவர் நடித்திருந்த ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் ‘மாவீரன்’ படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். மேலும் அவர் கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’ படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here