உலகின் நம்பர் 1 ஆக வலம் வந்த ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

0
8

உலகின் நம்பர் 1 ஆக டென்னிசில் வலம் வந்த ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.

சுவிட்சர்லாந்தது: சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

41 வயதான ரோஜர் பெடரர், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர். பாரம்பரியமிக்க விம்பியள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்ற சாதனை படைத்தவர் ரோஜர் ஃபெடரர்.

இதையும் படியுங்கள்: டி20 உலக கோப்பை 2022: மளமளவென விற்று தீர்ந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி டிக்கட்டுகள்

ரோஜர் பெடரர், உலகின் நம்பர் 1 வீரராக 310 வாரம் இருந்துள்ளார். அந்த சாதனை தற்போது தான் முறியடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரசிகர்கள் டென்னிஸ் விளையாட்டை பின் தொடர ரோஜர் பெடரர் காரணமாக இருந்துள்ளார்.

உலகின் நம்பர் 1 ஆக வலம் வந்த ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இந்த செய்தியை ரசிகர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் லண்டனில் தொடங்க உள்ள லேவர்ஸ் கோப்பைக்கு பின் ஓய்வு எடுத்து கொள்வதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வருடங்களாக பல அறுவை சிகிச்சை மற்றும் காயம் போன்றவற்றால் அவதி அடைந்ததையும் தற்போது அதில் இருந்து மீண்டதையும் ரசிகர்களாகிய உங்களுக்கு தெரியும் என நம்புவதாக கூறினார்.

அதையும் மீறி, டென்னிஸ் களத்திற்கு திரும்ப கடுமையாக முயற்சித்தேன். ஆனால் என்னுடைய உடல் ஒத்துழைக்கவல்லை. என்னுடைய உடல் எவ்வளவு தாங்கும் என்ற எல்லை எனக்கு தெரியும். அதனால் தான் இந்த ஓய்வு முடிவை எடுத்தேன். 24 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். டென்னிஸ் என் வாழ்க்கையில் நினைக்காதது எல்லாம் கொடுத்து இருக்கிறது.

நல்ல நண்பர்கள், ரசிகர்கள் என அனைத்தையும் கொடுத்தது இந்த டென்னிஸ் தான். என் வாழ்க்கை பயணத்தில் என்னுடன் இருக்கும் மனைவி மிர்கா மற்றும் என் குழந்தைகளுக்கு நன்றி. சிறு வயதில் டென்னிஸ் பந்தை எடுத்து கொடுக்கும் Ball boy ஆக என்னுடைய பயணத்தை தொடங்கினேன். டென்னிஸ் மீதான ஆர்வத்தால் கடுமையாக உழைத்தேன்,

உழைப்பின் பயனாக எனக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றி பல சாதனைகளை படைக்கும் உத்வேகத்தை கொடுத்தது. என் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விட்டேன் போன்ற ஒரு மனநிலை கொடுத்து இருக்கிறது. சிரிப்பு, அழுகை, வெற்றி, தோல்வி என அனைத்தையும் இந்த டென்னிஸ் கொடுத்திருக்கிறது. 40 நாடுகளில் விளையாடியதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். டென்னிஸ் நான் உன்னை காதலிக்கிறேன். உன்னை எப்போதும் கைவிட மாட்டேன் என்று தனது கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here