தளபதி 67 படத்தை இயக்குனர் லோகேஷ்கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படம் கேங்ஸ்டார் படமாக இயக்கப்படவுள்ள நிலையில் அந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு சரியான ஆட்கள் கிடைக்காமலும் இயக்குனரை நியமித்தும் அவர் இப்படத்திற்கு மறுத்த செய்திகளும் வந்துள்ளது.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கவர்ந்தவர் இவரின் நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹூட் ஆக்கும் அளவிற்கு பல ரசிகர்களின் ஆதரவை பெற்றவர். இவர் நடிக்கும் எந்த அளவிற்கு ஹூட் அடிக்கிறதோ அதைவிட வேகமாக இவர் நடிப்பில் உருவாகும் பாடல்கள் ஹூட் அடிக்கும்.
தற்போது, இயக்குனர் தெலுங்கில் பிரபலமான வம்சி படத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் ராஷமிகா மந்தனா ஜோடியாக நடிக்கவுள்ளார். மேலும், சரத்குமார், யோகி பாபு போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வந்துள்ளனர். இந்நிலையில், இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது வெளியாகின்றது.
இதையும் படியுங்கள்: பிக்பாஸ் வீட்டில் இந்த வார எலிமினேஷன் பற்றிய ப்ரோமா வெளியானது

அதே பொங்கல் பண்டிகையின் போது அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகின்றது. இந்த இரு படங்களுக்கும் மிகுந்த போட்டி நிலவி வருகின்றது ரசிகர்கள் மத்தியில் தற்போது, விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தை இயக்குனர் லோகேஷ்கன்க ராஜ் இயக்குகின்றார். இவர் கடைசியாக இயக்கி வெளி வந்த படம் விக்ரம் உலக நாயகனை வைத்து உருவான படம் சூப்பர் டூப்பர் ஹூட்டாகி வசூலிலும் பெரும் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களின் பெயர்கள் அடிபட்டன. அதில் தற்போது உறுதியாகி உள்ளது சஞ்சய் தத், மற்றும் விஷால் மட்டும் தான். இடையே பிருத்விராஜ், நிவின் பாலி ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. ஆனால் கால்ஷூட் பிரச்சனை காரணமாக அவர்கள் நடிக்க மறுத்துவிட்டனர்.
அதேபோல, வில்லன் கேரக்டருக்கு பெயர் போன இயக்குனர் மிஸ்கினை அணுகினர் அப்போது அவரிடம் நிறைய நாட்கள் படத்தில் நடிக்க வேண்டிய சூழல் இருக்கும் என கூறியதன் காரணமாக இயக்குனர் மிஸ்கின் மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.
ஏனெனில், இயக்குனர் மிஸ்கின் சிவகார்த்திகேயன் படத்திற்கு வில்லனாக நடித்து வருகின்றார். அப்படத்தின் சூட்டிங் முடிந்தவுடன் நடிகர் விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்குகிறார் அதனால் திட்டமிட்டப்படி பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதால் தளபதி 67 படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை அணுகுங்கள்.