தளபதி 67 படத்தில் இணைந்த மெகா நடிகர்கள் முழு விவரம்

0
16

தளபதி 67 படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வரும் நிலையில் காஷ்மீர் சென்றுள்ளது படக்குழு. இப்படத்தில் முக்கிய நடிகர் நடிகைகள் இணைந்துள்ளனர்.

நடிகர் விஜய்க்கு தமிழில் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அவர் நடிக்கும் படங்கள் பல்வேறு விமர்சனங்களை கடந்து வந்தாலும் வசூலில் வெற்றியை குவித்து வருகிறது. இதில் ஓன்று தான் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் அமர்களம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, விஜய் நடிப்பில் பொங்கல் ரீலிசாக வெளியாகிய வாரிசு குடும்ப பிண்ணனி கொண்ட படமாக இருப்பதால் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருந்து வருகிறது. இப்படமும் பல்வேறு விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் வெற்றி பெற்று இதுவரை 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வந்துள்ளது.

தளபதி 67 படத்தில் இணைந்த மெகா நடிகர்கள் முழு விவரம்

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவரை அப்டேட் கேட்டு வருகின்றனர். அவரும் விரைவில் படம் குறித்த அப்டேட் வெளியிடுவேன் என்று கூறி வந்தார்.

இந்நிலையில், படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர் மிஷ்கின், மன்சூர் அலி கான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர் கவுதம் மேனன், அர்ஜுன் ஆகியோர் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கதாநாயகியாக 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜயுடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார் நடிகை த்ரிஷா இவர்கள் இருவரும் இதுவரை கில்லி, ஆதி, குருவி, திருப்பாச்சி படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் நடிக்கவுள்ள இப்படம் விஜய் மற்றும் த்ரிஷாவிற்கு 5வது படமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்: பிக்பாஸ் பிரபலம் திருநங்கை ஷிவின் நடிகையாக நடிக்கிறார்

இந்த நிலையில் படம் குறித்த டைட்டில் டீசர் வருகிற 3ந் தேதி வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை உலக முன்னணி நிறுவனமான சோனி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here