விஜய் 67 படத்தின் வில்லன் கேஜிஎப் 2 ல் நடித்த வில்லனாம்

0
21

விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் விஜயின் 65 வது திரைப்படம் அதனை இயக்கியவர் நெல்சன் தீலிப்குமார் இசை அனிருத் இவர்களின் கூட்டனியில் அமைந்த இப்படம்  அனைத்து திரையரங்கிலும் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கும் தருவாயில் புதிபுதிதாக அடுத்த படத்திற்கான அப்டேட்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது.

தளபதி 66 படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதனை பிரபல தயாரிப்பாளர்களில் ஓருவரான தில் ராஜூ தயாரிக்கிறார். விஜயின் ஜேடியாக ராஷிகா மந்தனா நடிக்கிறார். இசையமைப்பாளர் தமன் இசைக்கிறார் இப்படத்தில் விஜயின் சகோதரா்களாக சரத்குமார் மற்றும் ஷியாம் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் 67 படத்தின் வில்லன் கேஜிஎப் 2 ல் நடித்த வில்லனாம்

விஜய் படங்களில் இது மாறுப்பட்ட கோணத்தில் காணப்படும் என்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகறது.  இத்திரைப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

இதற்கிடையில்,விஜய்யின் 64 வது படமான ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என பெரும் பட்டாளமே நடித்திருந்தனர். கரோனா சூழலிலும் தியேட்டர்களில் வெளியான படங்களில் ‘மாஸ்டர்’ மட்டுமே வசூலைக் குவித்ததாக கூறப்பட்டது.

விஜயின் 67 படத்திலும் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனவும் மாஸ்டர் படத்தில் இருந்த படக்கழுவினரும் இப்படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் வில்லனாக கேஜிஎப் 2 இல் நடித்த வில்லன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் திடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

கேஜிஎப் 2 ல் வில்லனாக நடித்தவர் சஞ்சய் தத் ஆதிரா என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்தார். சமீபத்தில் கேஜிஎப் 2 படுபயங்கர சாதனை புரிந்து வருவது குறிப்பிடத் தக்கது. 2019 அக்டோபர் 3 அன்று தான் மாஸ்டர் படப்பிடிப்பு தொடங்கியது. ஆதலால் 2022 அக்டோபர் 3 அன்று படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here