தளபதி 68 படத்தில் மீண்டும் இணையும் இயக்குனர் அட்லி. இவர்களது கூட்டணியில் தெறி, மெர்சல், பிகில் என வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி விஜயின் 68 வது படத்தில் மீண்டும் இணைகிறார்.
தற்போது, நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகின்ற பொங்கல் அன்று வெளியாகின்றது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். வாரிசு படத்தின் ஃபஸ்ட் லுக்கு குறித்து இடையமைப்பாளர் தமண் தன் இன்ஸ்டாவில் தகவல் கொடுத்திருந்தார்.
இப்படத்தில் விஜக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், எஸ்ஜே சூர்யா என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசையமைப்பது மூலம் தமன் முதன் முறையாக விஜய் படத்திற்கு அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தின் ஃப்ஸ்ட் சிங்கில் லுக்கு தீபாவளி அன்று வெளியாகும் என தமன் தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகின்றது. அந்த படமும் மிக மாஸாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், விரைவில் இந்த படத்திற்குக்கான படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதற்கு பிறகு, நடிகர் விஜய் இயக்குனர் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுவரை இவர்கள் கூட்டணியில் நடித்த தெறி, மெர்சல், பிகில் சூப்பர் டூப்பர் ஹூட்டாகி வசூலிலும் வாரிக் குவித்தது. இந்த படத்திற்கான ஸ்கிரிப்டை இயக்குனர் அட்லி ஷாருக்கான் நடிப்பில் வெளியாகும் ஜாவான் படத்தின் பணிகள் முடியும் நிலையில் அந்த பணிகளை செய்வார் என தகவல்கள் கூறுகின்றன. இந்த படத்தின் தயாரிப்பு பணிகளை தெலுங்கில் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் எடுத்திருக்கின்றது.
விஜய் மற்றும் அட்லி இருவரும் இணைவது நான்காவது முறையாக உள்ளது. இதனால் ரசிகர்கள் இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர்.