தஞ்சாவூர்: ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா பெருவுடையார் கோவிலில் நாளை மறுநாள் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. கொடி கொடி கொடி பறக்க சோழன் ஆண்ட நடுநாட்டு தலத்தில் சிறப்பான ஏற்பாடுகளுடன் சதய விழா நடைபெற இருக்கின்றது.
தமிழரின் கட்டிடக்கலையை உலகுக்கு பறைச்சாற்றுவனவாக அமைந்துள்ள தஞ்சை பெருவுடையார் கோவிலின் அதிசய சிற்பங்கள் வரலாற்றை மிஞ்சும் கோபுர கலை வானில் ஏற்படும் சூரியனின் நிழல் கோபுரத்தில் பட்டு தரையில் விழாது நிற்கும் அழுகு மிகுந்த தந்திரப்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட கோபுர கட்டமைப்பு மதிப்புக்குரியது. பண்டைய மாமன்னனின் பெருமை பேசுவன என்றால் மிகையாகாது.
இக்கோவிலை இன்றளவும் பலாயிரம் மக்கள் உள்ளூர் மட்டும் இன்றி பல மாவட்ட மக்களும் பல மாநில மற்றும் வெளிநாட்டவர்களும் கண்டு ஆச்சிரியப்பட்டு பார்த்து ரசித்து புகைப்படங்கள் எடுத்து பெரிய நந்தியை உயர்ந்து காணப்படும் சிவலிங்கத்தையும் தரிசனம் செய்து செல்கின்றனர்.
இதையும் கவனியுங்கள்: இராவணனின் தங்கை சூர்ப்பனகை கோவிலில் திருவிழா தொடங்கியது

இந்த கோவிலின் கட்டிடம் கருங்கற்களால், 216 அடி உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கோபுரத்தில், கலச வடிவிலான மேற்கூரை, 80 டன்னில், ஒற்றை கல்லால் செய்யப்பட்டது. 1987ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ எனப்படும் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால், உலகப் பாரம்பரியச் சின்னமாக, தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் அறிவிக்கப்பட்டது குறிப்படத்தக்கது.
உலக புகழ் பெற்ற இந்த கோவிலை காண, உலகம் முழுவதில் இருந்தும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் மட்டுமின்றி கட்டிடகலை நிபுணர்களும் தமிழகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இத்தகைய பெருமைமிகு பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்த ஐப்பசி மாத சதய நட்சத்திரம் வரும் நவ.3-ம் தேதி வருவதால், அவரது 1037-வது ஆண்டு சதய விழா அன்றைய தினம் நடைபெறவுள்ளது. ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு வரும் நவ.2-ம் தேதி பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெறவுள்ளது.
ராஜராஜசோழன், உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவச்சாரியர்கள் சிறப்பு யாகம் நடத்தி, பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர், கிரவியப்பொடி உள்ளிட்ட மங்களபொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தவுள்ளனர்.
இதனை தொடர்ந்து ராஜராஜசோழன், உலோகமாதேவி ஆகிய இருவருக்கும் சிறப்பான அலங்காரம் செய்வித்து வீதிஉலா வெகு விமர்சையாக நடைபெறும். இதனை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.