தஞ்சாவூர்: 1000 கிலோ அன்னத்தாலும் 700 கிலோ காய்கறிபழத்தால் அன்னாபிஷேகம்

0
16

தஞ்சாவூர்: சோழ நாட்டின் தலைநகரான தஞ்சையில் பிரசித்தி பெற்ற தலமாகவும் 1000 ஆண்டினை கடந்தும் மிகப் பெரும் கட்டிட வேலைப்பாட்டினை பறைசாற்றும் விதமாக இருந்து வரும் பெருவுடையார் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி அன்று நடத்தப்பட்ட அன்னாபிஷகம் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டாடி இறைவனின் நாமத்தை உச்சரித்து வந்து வழிபட்டனர்.

தஞ்ஞை மக்களால் பெரிய கோவில் என்ற பெயரால் அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுரை ஸ்ரீபெருவுடையார் திருகோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு பெருவுடையாருக்கு ஆண்டுக்கு ஓருமுறை அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம் அனைத்து சிவதலங்களிலும் நடைபெறுவது மரபாக இருந்து வருகின்றது.

இந்தாண்டு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையாருக்கு 1000 கிலோ அன்னமும் 700 கிலோ காய்கறி மற்றும் பழங்களாலும் அலங்காரம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் சிவபெருமான்.

இதையும் படியுங்கள்: தஞ்சை கோவிலுக்கு வேண்டிய பாராட்டு இன்னும் கிடைக்கவில்லை-ஆனந்த மகேந்திரா

தஞ்சாவூர்: 1000 கிலோ அன்னத்தாலும் 700 கிலோ காய்கறிபழத்தால் அன்னாபிஷேகம்

இதில் சுமார் 1000 கிலோ அன்னம் மற்றும் கேரட், கத்திரிக்காய், வாழைப்பூ, பூசணி, முள்ளங்கி, பீட்ருட், வெண்டைக்காய், புடலங்காய் மற்றும் மாதுளை, வாழைப்பழம் உள்ளிட்ட காய்கறிகள் என 700 கிலோ கொண்டு பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனையும் காட்டப்பட்டது.

இந்த அன்னாபிஷேகம் மூலம் உலக மக்கள் நலன் பெறவேண்டியும், நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும் பூஜை செய்யப்பட்டது. அன்னாபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்ப்பட்டது.

தஞ்ஞை பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் மிகவும் பிரசித்தம் பெற்றது தமிழ்நாட்டு மக்கள் மட்டும் அன்றி வேறு மாவட்ட மக்களும் வெளிநாட்டு மக்களும் இக்கோவிலை கண்டு ஆச்சரியம் அடைந்து பாராட்டியும் இறைவனை வணங்கியும் வருகின்றனர். தமிழர்களின் திறமையை பறைசாற்றுவனவாகவும் வரலாற்று சின்னமாகவும் இருந்து வருகின்றது. இத்தகைய பெருமை வாய்ந்தது தஞ்ஞை பெருவுடையார் கோவில் இந்த கோவிலில் அன்னாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற மற்ற தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here