சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் விஜய் அண்ணாவுக்கு நன்றி என்று நகைச்சுவை நடிகர் தனது டிவிட்டர் கணக்கில் ஹெலிமெட், கிளவுஸ், கிரிக்கெட் பேட்டுடன் புகைப்படம் ஓன்றை வெளியிட்டு இருக்கிறார்.
முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடன் நடித்து வந்துள்ளார். தற்போது நல்ல கதை அம்சம் கொண்ட கதாபாத்திரத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியான மண்டேலா படம் பல விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் பொம்மை நாயகி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். தொடர்ந்து மலை, மெடிக்கல் மிராக்கல், காண்ட்ராக்டர் நேசமணி, லோக்கல் சரக்கு, இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ள படத்திலும் போன்ற கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்திலும் இந்தியில் ஜாவான் படத்தில் ஷாருக்கானுடனும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கும் படமான வாரிசு படத்திலும் நடித்திருக்கின்றார். யோகி பாபு கிரி்க்கெட் விளையாடுவதை சைலான்டாக பார்த்து வந்த விஜய் அவருக்கு பரிசாக கிரிக்கெட் பேட் ஓன்றை அனுப்பியுள்ளார்.
இதை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள யோகிபாபு, “இந்த பேட்டை எனக்கு சர்ப்ரைஸாக கொடுத்த விஜய் அண்ணாவிற்கு நன்றி” என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
Intha bat aa enaku surprise a kodutha Vijay anna ku thankyou🤝@actorvijay #thalapathyvijayyogibabu pic.twitter.com/SI08LJNrFJ
— Yogi Babu (@iYogiBabu) December 10, 2022
இதையும் படியுங்கள்: பாபா படத்தின் ‘சக்தி கொடு’ பாடல் குறித்து பேசிய கவிஞர் வைரமுத்து
நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடி மகிழ்வார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் விஜ்ய் பரிசாக கொடுத்த பேட்டின் விலையை ரசிகர்கள் கண்டுபிடித்து பதிவிட்டு வருகின்றனர். அந்த பேட்டின் விலை ரூபாய் 10,000 ஆகும்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.