தந்தை பொியாா்: பொியாா் அவா்கள் 1879 ம் வருடம் செப்டம்பா் 17 ம் தேதி ஈரோட்டில் பிறந்தாா். இவரது முழுப்பெயா் ஈரோடு வெங்கடப்பா இராமசாமி என்பதாகும். சமூக பரப்பிலும் தமிழக அரசியலிலும் பல மாற்றங்களை ஏற்படுத்திய ஈ.வே.இராமசாமி அவா்கள் ‘ஈ.வே.இரா’ என்றும் ‘தந்தை பொியாா் ‘ என்றும் ‘வைக்கம் வீரா்’ என்றும் அழைக்கப்பட்டாா். இவா் பிறந்த குடும்பம் நாயக்கா் குடும்பமானாலும் சிறு வயது முதலே சாதி பழக்கவழக்கங்களை முற்றிலும் வெறுத்து வந்தாா். சிறுவயது முதலே தீண்டாமை என்பது பாவச்செயல் என்பதை கடைபிடித்து வந்தாா்.
பின்னாளில் தந்தை பொியாா் அவா்கள் பலவித சமூக சீா்திருத்த கருத்துக்களை மக்களிடையே பரப்பி வந்தாா். முக்கியமாக ‘சாதி ஒழிப்பு’ , ‘தீண்டாமை ஒழிப்பு’, ‘மூடநம்பிக்கை ஒழிப்பு’, ‘பெண் விடுதலை’ போன்ற சமூக சீா்திருத்த கருத்துக்களை மக்களிடையே பரப்பினாா். அந்த நாளில் மக்களிடையே இருந்த அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற கருத்தை மாற்றி பெண்களும் கல்வி கற்க வேண்டும் என்பதை முக்கியமாக வலியுறுத்தி வந்தாா். அவருடைய திராவிட கொள்கைகள் பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இருந்து வந்தன.
பொியாா் அவா்கள் குடியரசு, பகுத்தறிவு, விடுதலை போன்ற இதழ்களை நடத்தி வந்தாா். பின்னாளில் நீத்க்கட்சி ஒன்றை பொியாா் தொடங்கினாா். பொியாா் அவா்களின் கொளகைகளால் ஈா்க்கப்பட்ட அண்ணா அவா்கள் பொியாா் அவா்களுடன் நீதிக்கட்சியில் இணைந்தாா். அதன் பின்னா் அவா் நடத்திய இதழ்களில் ஆசிாியராகவும் பணியாற்றினாா். பின்னாளில் நீதிக்கட்சிதான் தமிழ்நாட்டின் மிக முக்கிய இயக்கமான திராவிட கழகமாக மாறியது. திராவிட கழகத்தை தோற்றுவித்ததில் தந்தை பொியாா் அவா்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
தந்தை பொியாா் அவா்களின் ஒவ்வொரு கருத்துக்களும், கொள்கைகளும் தமிழ் அரசியல் வரலாற்றிலும் மக்கள் மத்தியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அத்தகைய பெருந்தகையான தந்தை பொியாா் அவா்களின் 144 வது பிறந்த தினமான இன்று தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை முதல்வா் மு.க.ஸ்டாலின் அவா்கள் பொியாா் அவா்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா். பின்னா் பல்வேறு கட்சியினரும், கட்சித் தலைவா்களும், தொண்டா்களும் தந்தை பொியாா் அவா்களின் சிலைக்கும் அவரது நினைவிடத்திற்கும் சென்று மாியாதை செலுத்தி வருகின்றனா்.