2வது விமான நிலையம் தமிழகத்தின் தொழில் ரீதியான வளர்ச்சிக்கு உதவும் என்பது காலத்தின் கட்டாயம் தமிழக அரசு.
தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. வளர்ந்து வரும் தமிழகத்தின் தொழில் ரீதியான வளர்ச்சிக்காக மற்றுமொரு விமான நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளது. தற்போது, தான் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விமான நிலையம் அமையும் இடத்தை தேர்வு செய்துள்ளது.
தொழில் நுட்ப ரீதியாக சாத்தியமான இடங்களில் ஓன்றாக தான் பரந்தூர் விமான நிலையத்தை தேர்வு செய்துள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் சென்னை தொழில் மற்றும் வர்த்தக சபை இணைந்து, “பசுமை விமான நிலையம் – தமிழகத்தின் விரைவான வளர்ச்சிக்குத் தகுந்த தருணத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சி என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினரும், டாஃபே நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான மல்லிகா சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் டாஃபே நிறுவனத் தலைவர் மல்லிகா சீனிவாசன் பேசியதாவது, ‘உள்கட்டமைப்பு என்பது தேச வளர்ச்சிக்கு மிக முக்கிய தூண்டுகோள் ஆகும். பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை ஆகியவற்றுக்கு உள்கட்டமைப்பு முதுகெலும்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நவீன விமான நிலையம் என்பது பல வளர்ச்சிகளுக்கு தூண்டுகோளாக இருக்கும். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, 2028-ம் ஆண்டுக்குள் பரந்தூரில் விமான நிலையம் அமையவுள்ள செய்தி மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று பேசினார்கள்.
இந்த 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைவதால் மக்களின் தொழில் ரீதியான வளர்ச்சி காணும் தமிழகமும் வளர்ச்சி பெறும்.