வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை தொடர்ந்து இன்று 3வது பாடல் வெளியாகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் வருகிற பொங்கல் விழாவில் ரிலிசாக உள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தின் இயக்குனர் வம்சி இவர் தெலுங்கு பட இயக்குனர். திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது வாரிசு. தெலுங்கு திரையரங்குகளில் பொங்கல் போன்ற விழா நேரங்களில் அந்த மாநில நடிகர்களின் படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும் என்றும் பொங்கல் நாளில் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியிட முடியாது என்றும் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் வரும் முதல் பாடலான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அடுத்ததாக தீ தளபதி என்ற பாடலும் வெளியாகி மாஸ் பாடலாக வெளியானது. இந்த பாடலை சிலம்பரசன் பாடி ப்ரோமோஷன் செய்துள்ளார். இப்பாடலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது 3வது பாடல் இன்று மாலை வெளியாகிறது.

பல பிரச்சனைகளை படக்குழு சந்தித்து வந்தாலும் அதனை சரியாக உடைத்தெரிந்து வருகிறார்கள் படக்குழுவினர். இன்று மாலை வெளியாகும் 3வது பாடலை பாடியிருப்பவர் பாடகி சித்ரா இப்பாடல் முழுக்க முழுக்க அம்மாக்களுக்கு சொந்தமான பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அஜித்தின் வலிமை படத்தில் வரும் அம்மா பாடல் அனைவரையும் கவர்ந்தது அது போல இப்பாடலும் அனைவரையும் கவரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.
இப்படத்தில் விஜயக்கு ஜோடியாக ராஷிமிக்கா மந்தனா மற்றும் சரத்குமார், யோகிபாபு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தின் இசை வெளியீ்ட்டு விழா வருகிற 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. இருப்பினும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சுவாரசியமாக பேச இருப்பதை ரசிகர்கள் எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்: லவ் டுடே படம் 100 கோடியை எட்டியது பிரதீப் ரங்கராஜனின் சம்பளம் விவரம்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.