சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் வேகபந்து வீச்சாளர் இந்திய வீராங்கனை ஜூலன் கோசுவாமி.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியுடன் விடைபெற்றார் ஜூலன் கோசுவாமி நேற்று முடிந்த இந்திய மகளிர் அணிக்கும் இங்கிலாந்து மகளிர் அணிக்கும் நேற்று நடந்த மூன்றாவது இறுதி போட்டியுடன் இங்கிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த மகிழ்ச்சியுடனும் இவர் ஓய்வு பெற்றார்.
இந்திய அணி வீராங்கனைகள் கோஸ்வாமியின் கடைசி தொடரில் கவுரவப்படுத்தினர். அவர், பேட்டிங் செய்ய இறங்கியபோது இங்கிலாந்து அணி வீராங்கனைகள் இருபுறம் அணிவகுத்து நின்று அவரை வரவேற்றனர். அதேபோல், பவுலிங் செய்ய வரும்போது இந்திய வீராங்கனைகள் கோஸ்வாமிக்கு வரவேற்பு கொடுத்தனர். இதனால் மைதானத்தில் நெகிழ்ச்சி நிலவியது. கடைசி போட்டியில், 10 ஓவர்களில் வீசி 3 மெய்டன்களுடன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

போட்டிக்கு முன்னதாக பேசிய கோஸ்வாமி, “1997ல் ஈடன் கார்டனில் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் எல்லைகளில் வரும் பந்து பொறுக்கும் சிறுமியாக மைதானத்தில் பணியாற்றினேன். அன்றைய தினம் நானும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என கனவுகண்டேன். அப்படித்தான் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. நிறைய முயற்சி செய்தேன். எனது நாட்டிற்காக விளையாடியது என் வாழ்வில் மிகப்பெரிய தருணம்.
நான் இரண்டு [50-ஓவர்] உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடினேன், அதில் ஒன்றையாவது வென்றிருந்தால், எனக்கும், இந்தியாவுக்கும், மகளிர் கிரிக்கெட்டிற்கும் சிறப்பாக இருந்திருக்கும். அதுதான் இறுதி இலக்கு. ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அது எனக்கு ஒரு வருத்தம். இந்தியா என்ற பெயர் எழுதப்பட்ட ஜெர்சியை அணிந்துகொள்வது தான் எப்போதும் அனுபவிக்கும் தருணம். அது என் வாழ்வில் எனக்கு மறக்க முடியாத விஷயம்” என்று உருக்கமாக பேசி ஓய்வு பெற்றார்.