சென்னையில் அதிகரிக்கும் கொரோனா மாஸ்க் அணிவது கட்டாயம்

0
13

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா மாஸ்க் அணிவது கட்டாயம் எனவும் மால்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் என மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்கள் மற்றும் இரு சக்கர வாகன பயணங்களின் போதும் என மாஸ்க் அணிவது கட்டாயம் மாஸ்க் அணியாமல் இருப்பவர்களிடம் தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம் 1939 ன் படி ரூ 500 அபராதம் விதிக்கவும் சென்னை மாநகராட்சி உத்தரவு.

2019 ஆம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தையும் நடுநடுங்க வைத்த கோவிட் 19 உறுமாறி பல பரிணாமங்களில் வீரியம் அடைந்து திரும்பவும் பல நாடுகளில் மக்களை வருத்தம் அடைய செய்கிறது.

மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி முகாம்கள் மற்றும் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன .

பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கோவிட் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் 04.07.2022 நிலவரப்படி, 5,936 நபர்களுக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 04.07,2022 அன்று ஒரு நாள் மட்டும் 942 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது . தொற்று பாதித்த நபர்களில் 5,264 நபர்கள் வீட்டுத் தனிமையிலும், 57 நபர்கள் மாநகராட்சியின் கோவிட் பாதுகாப்பு மையங்களிலும், 263 நபர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் எந்தவித உயிர்பாதிப்பும் இன்றி நலமுடன் உள்ளனர். மண்டல அலுவலங்களில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையத்திலிருந்து வீட்டுத் தனிமையில் உள்ள 5,264 நபர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வணிகவளாகங்கள், துணிக்கடைகள், திரையரங்குகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என சென்னை மாநகரம் முழுவதிலும் மக்கள் முகக் கவசம் அணிய கட்டாயம் அணிய வேண்டும் என மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here