இராவணனின் தங்கை சூர்ப்பனகை கோவிலில் திருவிழா தொடங்கியது. இந்தியாவிலேயே சூர்பப்னகைக்கு கோவில் உள்ள மாநிலம் தமிழ்நாடு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகில் கூனவேலம்பட்டிபுதூர் கிராமத்தில் அழியா இலங்கை அம்மனாக காட்சி தருகின்றாள் சூர்ப்பனகை இத்தலத்தில் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது.
இங்கு வாழும் முன்னோர்கள் இக்கோவிலை ஆயா கோவில் என்று அழைக்கின்றனர். இக்கோவில் இந்து சமயநலத் துறையின் கீழ் இயங்குகின்றது. கிழக்கு, மேற்கு, வடக்கு என மூன்று வாசல்களைக் கொண்டுள்ளது. தினமும் கிழக்கு மற்றும் வடக்கு வாசல் கதவுகள் திறக்கப்படுகின்றது. திருவிழாக் காலங்களில் மேற்கு வாசல் கதவுகளும் திறக்கப்படுகின்றது.
கருவறை முன்மண்டபம் 16 தூண்களால் எழுப்பப்பட்டுள்ளது. முன் மண்டபத்தை ஒட்டியுள்ள ஊஞ்சலில் திருவிழாக்காலங்களில் அம்மனை ஊஞ்சலில் வைத்து, பாட்டுப்பாடி வழிபடுவது வழக்கமாக உள்ளது.
” சீதையைத்தேடி அனுமன் இலங்கை சென்ற போது, வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற சூர்ப்பனகை தடுத்தாள். அனுமன் தன் வாலினால் அவளை கட்டி சுருட்டி வீச, புதர்மண்டிய வனப்பகுதியான இந்தப்பகுதியில் தலைகீழாக வந்து விழுந்தாள். அந்த சூர்ப்பனகையை அழியாஇலங்கை அம்மனாக மக்கள் வழிபடுகின்றனர்,” என்பது தலவரலாறு.

இந்தியாவில் சூர்ப்பனகைக்கு உள்ள ஒரே ஒரு கோவில் இது மட்டுமே. கர்ப்பகிரகத்தில் அம்மன் தலை மட்டும் இருக்கும். ராம, லட்சுமணர்களால் வெட்டப்பட்ட சூர்ப்பனகையின் தலை விழுந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டதால் உடல் இல்லாத தலை மட்டுமே உள்ளது. இலங்கை அழிவதற்கு முன்பே இங்கு வந்து சேர்ந்ததால், அழியா இலங்கை அம்மன் என்று அழைக்கப்படுகிறார்.
இதையும் கவனியுங்கள்: அருட்பெரும் ஜோதியான வள்ளாரின் 200வது பிறந்த நாள் இன்று
400 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று இரவு தொடங்கி (வெள்ளிக்கிழமை) திருவிழா நடக்கிறது. இதில், வேண்டுதலை நிறைவேற்ற வெள்ளிக்கிழமை அதிகாலையில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர், ஆடுகளை பலியிட்டு விருந்து அளிப்பர்.
இந்த திருவிழா ஐப்பசி மாதம் தீபாவளி முடிந்த வெள்ளிக்கிழமை அன்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர். திருவிழாவினை முன்னிட்டு அப்பகுதி மக்கள் செவ்வாய் கிழமை முதல் 3 நாட்கள் விரதம் இருப்பர் அரிசி சோறு மற்றும் அசைவ உணவுகளை உண்ணாமல் கோதுமை, தினை, வரகு, கம்பு, ராகி, கேழ்வரகு என்பனவற்றை சமைத்து சாப்பிடுவர். பொண்கள் விரதம் இருந்து வெள்ளிக்கிழமை அன்று கோவில் வளாகத்தில் பொங்கள் சமைத்து அம்மனுக்கு படையல் இடுவர். அப்படி பொங்கல் வைக்கும் பெண்கள் வெள்ளைச் சேலை அணிந்து பொங்கல் வைக்கும் முறை பாரம்பரியமாக நடைபெற்று வருகின்றது. பின்னர், ஆடுகளை பலியிட்டு படையல் நடத்துவதையும் அப்பகுதி மக்கள் ஐதீகமாக கொண்டாடி வருகின்றனர்.
இத்திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் அருகில் உள்ள மாவட்ட மக்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பாக நடத்தி வழிபாடு நடத்துவதை பாரம்பரியமாக கடைப்பிடிக்கின்றனர்.
இது போன்ற பல தகவல்களையும் அறிய தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.