சிம்புவின் பத்து தல படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு

0
5

சிம்புவின் பத்து தல என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இந்தாண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருகின்ற புதிய ஆண்டில் மார்ச் மாதம் 30ந் தேதி வெளியாவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் சிலம்பரசன் தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார். அந்த வரிசையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்து வசூலிலும் 100 கோடிக்கு மேல் பெற்றது.

தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிறப்பான நடிப்பில் அனைவரையும் கவர்ந்தார். இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனமும் வெற்றியை கொண்டாடும் விதத்தில் நடிகர் சிம்புவிற்கு விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்தது. இயக்குனர் மேனனுக்கு என்பீல்டு டூவிலரை பரிசாக கொடுத்து அசத்தியது.

சிம்புவின் பத்து தல படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு

தற்போது, நெடுஞ்சாலை, சில்லுனு ஓரு காதல் போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்தி, ப்ரியா பவானி ஷங்கர், கலையரசன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் என கூறப்படுகிறது. ஸ்டுடியோ கீரின் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரஹமான் இசையமைத்துள்ளார். இந்தாண்டே இப்படம் திரையரங்கிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருகின்ற 2023 புதிய ஆண்டில் மார்ச் 30ந் தேதி வெளியாவதாக இந்த ஆண்டின் இறுதியில் மாஸான அப்டேட்டை வழங்கி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது படக்குழு.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தில் தீ தளபதி பாடலை சிம்பு பாடியதை விஜய் ரசிகர்களும் சிம்பு ரசிகர்களும் கொண்டாடி வரும் நிலையில் இந்த பத்து தல படத்தின் அப்டேட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து ராங்கி படம் பார்த்த த்ரிஷா

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here