துணிவு திரைப்படம் வருகிற ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் திருவிழாவிற்கு திரையரங்குகளுக்கு வெளியாக உள்ள நிலையில் ஓவ்வொரு கதாபாத்திரங்களின் புகைப்படத்தையும் படக்குழு புதிய முறையில் வெளியிட்டு அசத்தல்.
நடிகர் அஜித்குமாருடன் இயக்குனர் எச் வினோத் இதோடு மூன்றாவது முறையாக இணைந்து படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்னர் இயக்கிய வலிமை படத்தை அஜித் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் அனைவரும் விரும்பி வரவேற்றனர். தொடர்ந்து வெற்றியும் பெற்று வசூலிலும் சாதனை புரிந்தது.
மீண்டும் அஜித்துடன் இயக்குனர் வினோத் துணிவு படத்தின் மூலம் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பை போனிக்கபூர் செய்துள்ளார். தமிழ்நாட்டில் தியேட்டர் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இந்நிலையில் எந்த ஓரு படத்திற்கும் இது போன்றதொரு கதாபாத்திரங்களின் அடிப்படையில் புகைப்படத்துடன் கூடிய படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் அஜித்குமார், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜீ.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ‘துணிவு’ திரைப்படத்தில் நடிகர் பிரேம், பிரேம் என்ற கதாபாத்திரத்திலும் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் , மைபா என்ற கதாபாத்திரத்திலும் ராஜேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பக்ஸும் கிரிஷ் என்ற கதாபாத்திரத்தில் ஜான் கொக்கேனும் மேலும், மஞ்சுவாரியர் கண்மணி என்ற கதாபாத்திரத்திலும் சமூத்திரக்கனி தயாளன் என்ற பெயரில் போலிஸ் அதிகாரியாகவும் தொடர்ந்து காதாபாத்திரங்களின் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகின்றது படக்குழு.
இதையும் படியுங்கள்: இன்று வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் 30.12.2022
தொடர்ந்து வெளியாகும் புகைப்படங்களால் அஜித் ரிசகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் துணிவு படத்தின் டிரைலர் நாளை மாலை 7.00 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிரடியாக அறிவித்துள்ளது. சில்லா சில்லா பாடல் காசேதான் கடவுளடா, கேங்ஸ்டார் போன்ற பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.