ஏகே 61 வது படத்தின் தலைப்பு துணிவு முதல் போஸ்டர் வெளியாகி வைரல்

0
13

ஏகே 61 வது படத்தின் தலைப்பு துணிவு முதல் போஸ்டர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ஹச். வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் முதல் போஸ்டர் பட்டையை கிளப்பி வருகிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் தன்னுடைய 61 வது திரைப்படத்தில் அஜித் குமார் நடித்த வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் அந்த திரைப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

இந்த நிலையில் மீதம் இருக்கும் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெறுகிறது. இதற்காக இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர். அத்துடன் நடிகர் அஜித் வரும் 23ஆம் தேதி அங்கு செல்கிறார். இந்த நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை இன்று மாலை படக் குழுவினர் வெளியிட உள்ளனர் என தகவல் வெளியாகி இருந்தது.

ஏகே 61 வது படத்தின் தலைப்பு துணிவு முதல் போஸ்டர் வெளியாகி வைரல்

அதன்படி மாசாக டைட்டில் துணிவு என்ற படத்தின் தலைப்பும் ஹாயாக ஏகே அமர்ந்து போஸ் கொடுப்பதுமான முதல் போஸ்டர் வெளியாகி டிரன்டிங்கில் உள்ளது. மேலும், இப்படத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படம் வங்கியில் கொள்ளை அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். மேலும் ரசிகர்களை கவரும் வண்ணம் பைக் ரேசிங் சேசிங் என அசத்தலான காட்சிகள் இடம் பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மங்காத்தாவில் எப்படி ஏகே சிறப்பான சம்பவங்களை செய்தாரோ அதே போன்று இப்படத்திலும் தரமான சம்பவங்கள் இருக்கும் என ரசிகர்கள் நம்பி படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here