பெண் குழந்தைகளை கேவலமாக எண்ணுவது துர்துஷ்டவசமானது உயர்நீதிமன்றம்

0
6

பெண் குழந்தைகளை பெற்றெடுப்பதை கேவலமாக எண்ணுவது துர்துஷ்டவசமானது என உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உலகம் தோற்றம் பெற்றது முதல் பெண்ணின் தேவைகளும் சேவைகளும் எண்ணில் அடங்காதவை. பெண்கள் இல்லையேல் இவ்வுலகம் இல்லை என்ற அடிப்படை கூட சரியாக சிலருக்கு புரிவதில்லை. பெண் குழந்தைகள் வீட்டின் குலவிளக்குகள் என்பதை அறிந்தும் பெண் குழந்தை பிறந்தால் அதை ஏளனமாக பார்க்கும் சமூகத்தில் இன்னும் இருக்கிறோம் என்பது மிக துயரமான செய்தி.

வேலூர் மாவட்டம், பொன்னை பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற பெண்ணுக்கு லத்திகா, ஹாசினி, சத்யா என மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. மூன்றும் பெண் குழந்தைகள் என்பதால், அவர்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றார். 2 குழந்தைகள் இறந்த நிலையில், உயிர் தப்பிய சத்யாவுக்கு வேலூர் விரைவு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

பெண் குழந்தைகளை கேவலமாக எண்ணுவது துர்துஷ்டவசமானது உயர்நீதிமன்றம்

இந்த தீர்ப்பை எதிர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் சத்யா மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பெண் குழந்தை பெறுவதை கேவலமாக எண்ணும் போக்கு இன்னும் தொடர்வது குறித்து வேதனை தெரிவித்தது. சத்யாவை விடுதலை செய்த நீதிமன்றம், உயிருடன் இருக்கும் 2 குழந்தைகளையும் பட்டப்படிப்பு வரை படிக்க வைப்பதாக சத்யா உத்தரவாத பத்திரம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜராகி குழந்தைகளை படிக்க வைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here