DLS முறைப்படி இந்தியா நியூசி 20 ஓவர் தொடர் சமனில் முடிந்துள்ளது

0
12

DLS மறைப்படி இந்தியா நியூசி 20 ஓவர் தொடர் சமனில் முடிந்துள்ளது. நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி 3 20 ஓவர் மற்றும் 2 ஓருநாள் தொடரில் பங்கேற்கிறது. டி20 போட்டியில் முதல் ஆட்டம் கடும் மழைக் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவின் சதத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்று 3வது போட்டி நடைபெற்றது இதில் வெற்றி பெறும் அணிபட்சத்தில் இந்திய அணி டி20 கோப்பயை வெல்லும் அதேபோல நியூசியும் தனது சொந்த மண்ணில் சமன் செய்ய போராடும் என்ற பரப்பரப்பான சூழலில் டாஸை முதலில் வென்ற நியூசி பேட்டிங்கை தீர்மானித்தது.

நியூசிலாந்து அணியின் கான்வே 49 பந்துகளில் 59 ரன்களை எடுத்து அர்ஷதீப் சிங்கின் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். ப்ளிப்ஸ் 33 பந்துகளில் 54 ரன்களை விளாசினார். இந்த இரண்டு வீரர்களை தவிர அனைவரும் விரைவில் அவுட்டாகினர். இறுதியாக 19.4 பந்துகளில் அனைத்து விக்கெடையும் இழந்து 160 ரன்களை எடுத்தது.

DLS முறைப்படி இந்தியா நியூசி 20 ஓவர் தொடர் சமனில் முடிந்துள்ளது

இந்திய பந்துவீ்ச்சில் அர்ஷதீப் சிங் 4 விக்கெட்டுகளையும் சீராஜ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் 10, 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடி காட்டி வரும் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்து 13 ரன்களில் வெளியேறினார். ஸ்ரேயாஷ் அய்யர் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இதற்கிடையில் இந்திய அணியை காப்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நிதானமாக ஆடி வருகிறார். இவருக்கு ஜோடியாக தீபக் ஹூடா இருந்து வருகிறார். 9 ஓவர் முடிவில் 75 ரன்களை கடந்து இந்திய அணி திணறி வந்த நிலையில் மழைக் குறுக்கிடவே நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக மறுபடியும் விளையாட முடியாததால் DLS முறைப்படி 9 ஓவர்களில் 75 ரன்களை எடுத்து 4 விக்கெட்களை இழந்து இரு அணிகளும் இருந்ததால் இந்த தொடர் சமனில் முடிந்துள்ளது.

இது சம்பந்தமாக பேட்டி அளித்த ஹர்த்திக் மழையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது இந்த நிகழ்வை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்றார். நாங்கள் நியூசியின் அதிரடி பவுலர்களின் பந்துகளை அடித்து ஆடி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், மழை குறுக்கிட்டதால் சமனில் முடிக்க வேண்டிய கட்டாயம் எற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here